பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பண்டாரத்தின் பெரும் பகுதியைப் படைப்புறக் கணிப்பிற்கென ஒதுக்கி வைக்கின்றன.

படை அமைப்பும், அப்படையேந்தும் போர்க் கருவிகளும் காலங்தோறும் வேறுபடுவது உலகத்தின் இயற்கையாம். இராமாயண காலத்தில் வானரப் படைகளையும், கரடிப்படைகளையும் காண்கிறோம். மலைகளும்,மரங்களும் போர்க்கருவிகளாகப் பயன் பெற்றன.பாரதகாலத்தில் தேர்ப்படை,யானைப் படை, குதிரைப் படைகளைக் காண்கிறோம். வாள்,வேல்,வில் வழங்கப்பெற்றன. இக்காலத்தில் தரை வழங்கு தாங்கிகளையும், வான்வழங்கு விமானங்களேயும், நீர்வழங்கு நாவாய்களேயும் காண்கிறோம்.அணு குண்டும், ஆவிக்குண்டும் அச்சுறுத்துகின்றன.ஆக,ஒரு காலத்தில் இருந்த படைஅமைப்பு பிறிதொரு காலத்தில் இல்லே.ஆனால், களத்தில் நின்று மக்கள் போரிட்ட நிகழ்ச்சியைக் கற்காலத்திலும் கண்டோம்; முச்சங்க காலத்திலும் அதற்கும் முந்திய காலத்திலும் கண்டோம்; இராமாயண,பாரத காலத்திலும் கண்டோம்; இன்றும் காண்கிறோம். படைவரிசையுள் இடம் பெறுவன வானரம்,கரடி,குதிரை,யானை போலும் உயிருள் பொருள்களேயெனினும், தாங்கியும் தேரும் போலும் உயிரில் பொருள்களே யெனினும், அவற்றை இயக்குபவர் மக்கட்படையினரேயாதலா லும், அன்னர் இயக்காராயின் அவை இயங்கா ஆதலாலும், அப்படைகளால் வென்று கொண்ட காட்டையும் கோட்டையையும் இறுதியில் சென்று கைப்பற்றி ஆள்வது, மக்கட்படையாம் காலாட்படையால் அல்லது பிறவற்றால் இயலாது ஆதலானும் படைவரிசையுள், மக்கட்படை அன்றும் இடம்பெற்றது; இன்றும் இடம் பெறுகிறது; என்றும் இடம் பெறும். ஆகவே மக்கட் படையே படைவரிசையுள் சாலச் சிறந்ததாம் என்க.