பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 புகழ்மீது கருத்து இருக்கவேண்டுமே யல்லது தன் உயிர்மீது கருத்து இருத்தல் கூடாது என வீரனுக் குரிய பண்புகளையும் வகுத்துக் கூறியுள்ளார் வள்ளுவப் பெருங்தகையார். கூறிய விதிமுறைகளே நோக்கின், அமைச்சன் கடம்ை அரசவையோடு நின்று விடுகிறது; படைத் தலைவன் கடமை போர்க்களத்திலேயே பொருந்தி யுளது என்பது புலனும் அமைச்சனுக்குப் புத்தியிருங் தால் போதும்; படைத்தலைவனுக்குக் கத்தியிருந்தால் போதும்; என, அக்கால அறநூற் பேராசிரியர்கள் எண்ணியுள்ளார்கள். அறிவு இருப்பவன் பால் ஆற்றல் இராது. ஆற்றல் உடையவன் பால் அறிவு இராது. அவ்விரண்டையும் ஒருசேரப்பெற்றவர் உலகத்தில் அரி யர் என்ற உணர்வு இருந்ததினலேயே, அறநூல்களே வகுத்தவர்கள், அவ்விருவர்க்கும் உரிய கடமைகளைத் தனித்தனியே பிரித்துக் கூறினர்கள். ஆனல் அவ்விரு வர்க்குரிய பண்புகளும் ஒருவரிடத்தே இடம்பெறு வதை-அதாவது, உள்ளறிவும் உடலாற்றலும் ஒரு வனிடத்தே விளக்கம் பெறுவதை அவ்வறநூற் பேரா சிரியர்கள் வெறுப்பவரல்லர். அத்தகைய பெரி யோரைக் காணும்பேற்றினை அவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லே. அமைச்சர்பால் இருக்கவேண்டிய ஆழ்ந்த அர சியல் அறிவையும், படைத்தலைவர்பால் இருக்க வேண்டிய பேராற்றலையும் ஒரு சேரப் பெற்றிருந்தான், பாண்டியர் படைத் தலைவருள். ஒருவன். நாகன் என் பது அவன் இயற்பெயர். - பாண்டி காட்டில் அருப்புக் கோட்டைக்கு அண்மையில் உள்ள காலை என்ற ஊரே நாகனுக்கு உரிய ஊராம். வேலே என்ற ஊர்ப் பெயர் வேலூர் எனத் திரிந்து வழங்குவதுபோல், பண்டு, காலே எனும்