பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெயர் பெற்றிருந்த அவ்வூர், இக்கால நாலூர் எனத் திரிந்து வழங்குகிறது. நாலூர், வீரம் மிக்க வழியின ரின் வாழ்விடம்ாக விளங்கிய விழுச் சிறப்பும் வாய்ங். தது. கோசர் என்ற கொற்றம் மிக்க வீரர் கூட்டம் அவ்வூரில் வாழ்ந்து, காலூர்க் கோசர்’ என காட்டு மக்களால் அழைக்கப் பெற்றுள்ளது. வீரம் செறிந்த அப்பேரூரில் பிறந்து, அவ்வூராட்சிக்கு உரிமை பெற்ற வய்ை வாழ்ந்திருந்தான் காகன். - நாகன் ஒரு சிறந்த வீரன். வேல் கொண்டு போரிடுவதில் சிறந்த பயிற்சி பெற்றிருந்தான். களத். தில், தன் படையணிகளை எவ்வெவ்வாறு பிரித்து. எங்கெங்கே நிறுத்தி வைக்கவேண்டும், பாய்ந்துவரும். பகைவர் படையை எவ்வாறு தடுத்து நிறுத்தவேண் டும், பகைவர் படைவரிசையுள், அங்த அணியை எங்த நேரத்தில் தாக்கினல் வெற்றி எளிதில் வாய்க் கும் என அறிந்து, அதற்கேற்ப ஆற்றல் மிகுந்து ஆண்மை. யோடு போரிடுவான். பருந்து கூட்டங்களின் பசிதீரு மளவு பிணங்கள் விழக்கண்ட பிறகும் அவன் போர் வேட்டை தணியாது. அத்தகைய ஆண்மையும் அஞ் சாமையும் அவன்பால் குடிகொண்டிருந்தமையால், தோல்வி என்பதையே அவன் கண்டதில்லை. கல்ல போர்ப்பயிற்சி பெற்றிருந்த நாகனிடத்தில் நாளாடவேண்டிய நல்ல அரசியல் அறிவும் பொருங் தியிருந்தது. அவனிடம் ஆண்மை அதிகமா, அரசியல் அறிவு அதிகமா என அளவிட்டுக் கூறுவது ஆகாது. ஏவ்வளவு ஆண்மை இருந்ததோ, அந்த அளவு அறிவும் இருந்தது. அறிவு, ஆண்மை இரண்டையும் ஒருசேர மதித்துக் காத்து வந்தான் நாகன். . நாகன் காலையில் வாழ்ந்திருந்த நாட்களில், பாண்டிநாட்டு அரியணேயில் அமர்ந்திருந்தவனுக்கு ஒரு பெரிய அரசை அமைக்க வேண்டும் என்ற பேராசை பிறந்தது. அப்பேராசை, கொண்ட அவன், அவ்வாசை