பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போருர்ப் பழையன் காவிரியாற்றுப் பாய்ச்சலால் வளம் பெற்ற, பேரூர்களுள் போரூரும் ஒன்று. போரூர் மக்கள், ஆற்றுநீரைப் பயன் கொள்ளவல்ல அறிவுவளம் வாய்க்கப் பெற்றிருந்தனராதலின், அவர்கள் தம் ஊர் அருகே ஒடிய காவிரியாற்றுர்ே கொன்னே ஓடிக் கடலில் வீழ்ந்து வீணுவதை விரும்பினரல்லர். காவிரி யாற்றிலிருந்து பெரிய பெரிய கால்வாய்கள் பலவெட் டியும், அக் கால்வாய்கள் வழியே பெருகி ஓடிவரும் ைேர, வேண்டிய காலத்தில் வேண்டுமளவு பெறத் துணே புரியவல்ல மதகுகள் பல அமைத்தும் பயன் கொண்டு வளம் கண்டனர். அதல்ை அம்மதகுகளின் ஊடே நுழைந்து கிறைந்து ஒடும் ர்ே எழுப்பும் பேரொலி, இரவு பகல் எப்பொழுதும் ஓவென ஒலித் துக்கொண்டே யிருக்கும். ஓவெனும் ஒலி எழ ஓயாது. நீர் பாய்ந்து வளம் கொழித்தமையால், வாணிக விலை யங்களும், விழாக்களங்களும் மலிந்து, அவை குறித்து வந்து குழுமும் மக்கள் கூட்டம் எழுப்பும் ஆரவாரப் பேரொலியும் அலேயொலிபோல் ஆங்கு ஒலித்துக் கொண்டே யிருக்கும். அதனல், அம்மாநகர், கைவளே கள் கலீர் கலீர் என ஒலிக்க உலாவும், அழகும் இளமை, யும் கொழிக்கும் ஆரணங்குகளின் அழகுத் தோற்றம் காட்டிற்று எனப் புலவர்கள் போற்றுவாராயினர். பெருமைமிக்க அப்போரூர்க்கு மேலும் பெருமை யளிக்கப் பிறந்திருந்தான் ஒரு வீரன். பழையன் எனும் பெயர் பூண்டிருந்த அவன் இளமைப் பருவத்திலேயே. பல்வகைப் படைக்கலங்களிலும் பெரும்பயிற்சி பெற்.