பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 றிருந்தான். விற்போரில் சிறந்து விளங்கினன். வில்லில் நாண் ஏற்றி அம்பேவத் தொடங்கினால், அம்புகள் மழைத்தாரையென மள மளவென விரைந்து வெளிப் படும். வாட்போரிலும் வல்லன் அவன். வாட்போர் புரியுங்கால், இடக்கையில் ஏந்தி நிற்கும் கேடகம், கார் மேகம் போல் அவனே மறைத்துக் காவல்புரியும். விற் போரிலும் வாட்போரிலும் பெற்றிருந்த பயிற்சியைக் காட்டிலும் சிறந்த பயிற்சியை, வேலேந்திப் போரிடு வதில் பெற்றிருந்தான். குறி பிழையாது வேல் எறியப் பழகியிருந்தான் பழையன். வேலெறிவதில் பழையன் பெற்றிருந்த பயிற்சியைக் கண்டு வியந்த அக்காலப் புலவர்கள், உண்மைக் காதலன் தன் அன்புக் காத விக்கு அளித்த வாக்குறுதி தப்பாததுபோல், பழையன் எறிந்தவேலும் தப்பாது சென்று பாயும்’ என அவன் போர்ப் பயிற்சியைப் பாராட்டியுள்ளார்கள். பழையன் பெருவீரய்ைப் போரூரில் வாழ்ந்திருந்த போது, சோணுட்டு அரியணையில் செங்கணுன் என்ற செல்வப் பெயருடையான் அமர்ந்திருந்தான் அக்காலே, கொங்கர் எனும் கொள்ளைக் கூட்டத்தவர், அவன் காட்டுள் புகுந்து, அவன் காட்டு ஆனிரைகளைக் கொள்ளே கொண்டு அழிவுபல விளைத்து வந்தனர். பேரரசர் பலர் முயன்றும்வென்று அழிக்கமுடியாத அக் கொங்கரை அடக்கி ஒடுக்க விரும்பினன் செங்களுன். ஆல்ை அம்முயற்சியில் வெற்றி காண்பது, தன்னிடம் அப்போதுள்ள படையாலும் படைத்தலைவராலும் ஆகாது என்பதை உணர்ந்திருந்தானதலின், சிறந்த வீரன் ஒருவனேப் படைத்தலேவகைப் பெறக்கூடிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். மன்னன் மன வேட்கையை அறிந்த சிலர், பழையன் பேராண் மையை அவனுக்கு அறிவித்தனர். அஃகறிந்த செங் கணுன் பழையனே அரசவைக்கு அழைத்துக கண் டான். உண்மையிலேயே அவன் சிறந்த வீரன் என்