பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

87


சென்னைவாசியும், தன் தாயகத்தில் சார்ந்திருந்த சாதித் தொடர்பைவிட்டுக் கொடுப்பதில்லை. தாயகம் திரும்பியதும், தன் பழைய இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளவே விரும்புகிறான். மேற்கொண்ட தொழில் எதிர்பார்ப்புக்குக் குறைவான பயனையே அளிக்கிறது. மிகப் பெரும்பாலோர் தங்கள் தாயகத்தில் வழிவழியாக மேற்கொண்டிருந்த உழவுத் தொழிலுக்கே செல்கின்றனர். வீடுகளில் எடுபிடி வேலைகளுக்குச் செல்வது, இந்தியாவில் அவ்வேலை செய்தவர்களே. வணிகர்கள், இந்தியாவிலும் பெரும்பாலும் அத்தொழில் புரிந்தவர்கள், சென்னையிலிருந்து குடிவாழச் சென்றவர்கள், தங்களோடு, தங்களுக்கே உரிய உலகை உடன் கொண்டு சென்று. ஆங்குத் தங்களைச் சூழ அமைத்துவிட்டனர்.” (பக்கம் 72)


தென்னிந்தியாவுக்கே உரிய பல தனிச் சிறப்புகளைச் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து மற்றும் கிரீட் ஆகிய நாடுகளில் உள்ள, கைவண்ணப் பொருட்களிலும், கலைகளிலும், சமய, சமுதாயப் பழக்க வழக்கங்களிலும் காணலாம். ஏனைய தொல் பழங்கால நாடுகள் பற்றிச்சொல்லத் தேவை இல்லை. இன்று இரவு, அவற்றுள் சில பற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றேன். தென்னிந்தியாவில், பழங்காலத்தே தெரிந்திருந்த தொழில்களில் முதல் இடத்தைப் பெற்றது. மீன்பிடி தொழில் மீன்பிடித்தலுக்குக் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. கனத்த நீண்ட மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்று, தென்னங்கயிறுகளால் பிணிக்கப்பட்டு, பிளந்த மூங்கில் கழிகள் துடுப்புகளாகப் பயன்படுத்தப்படும். கட்டுமரப்படகும், வள்ளம் எனப்படும் சிறுபடகும் இருந்தன. வளர்ந்துவந்த வாணிக ஆர்வத்தால் படகு கட்டும் தொழில், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு-16) படகின் மாதிரிகளும் பலப்பல இடத்திற்கு இடம் வேறுபட்டன. மலபார் நாட்டு ஈர்க்கும் சிறு படகுகள், பாம்பு