பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழர் தோற்றமும் பரவலும்


வகைப் படகுகளும், கோடிக்கரைக் கள்ளத் தோணிகளும், இவைபோலும் பிறவும் உள்ளன. இவையெல்லாம், பண்டைய கட்டு மரங்களில், அழியாது இருப்பனவாம்; சிலப்பதிகாரம், வடிவமைப்புகளிலும், அளவிலும் வேறு வேறுபட்ட எண்ணற்ற படகுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படும் வடிவுடையன, திரைமுகப் படகு, யானைமுகப் படகு, சிங்கமுகப் படகுகளாம். (பரிமுக அம்பியும். கரிமுக அம்பியும், அரிமுக அம்பியும்” (காதை 13 176-177):

அவற்றுள் கள்ளத் தோணி வகைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவை, இருமுனைகளின் இரு பக்கங்களிலும், நல்லன நல்கும் குறியாகக் கருதப்படும் “உ” என்ற குறி, மற்றும் குதிரைகளோடு, கண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இது, தீமைகளை விலக்குவதற்காக எனக் கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களும், கிரேக்கர்களும், உரோமானியர்களும் இதை வியப்பூட்டும் நிலையில், பின்பற்றினர். இவற்றின் அழியா நினைவுச் சின்னங்களைச், சீனாவிலும், இந்தோசீனாவிலும், இன்றும், காணலாம். அவை அடிப்பாகம் தட்டையாக உடையவும், சிறு கடல் ஓடும் நாவாயும் (Junks and Sampans) ஆகும். காவிரி மற்றும் பெரிய ஆறுகளில் பக்கத்தில் உள்ள கூடை முடையப் பயன்படும் விரிசல்களால் பின்னப்பட்டு, தோல் மூடிய பரிசில், டைகரஸ் மற்றும் யூபிரடஸ் ஆறுகளைக் கடக்கப் பயன்பட்ட ஒன்றாம்.

தொல் பழங்காலப் பாசன முறைக்கு மூலம் ஆக விளங்கு நிலையால், தென்னிந்தியா மீண்டும் ஒரு புகழுக்கு உரியதாம். குறிப்பு-17 தென்னிந்திய அரிசி நாகரீகம் தென்சீனா மற்றும் இந்தோனேசியா நாகரீகத்தோடு ஒப்பிடக்கூடியதாம். கோதுமை நாகரீகத்தின் மைய இடம், அந்நாகரீகம் எங்கிருந்து மெசபடோமியாவுக்கும் நைல் நதிப் பள்ளத்தாக்கிற்கும் சென்று