பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

89


பரவியதோ, அந்த இடமாம் சிந்துவெளிப் பள்ளத்தாக்காம், ஒன்று கொடுத்து ஒன்று வாங்கும் முறையால், பிற்காலத்தில் இந்தியா பெற்ற மக்காச்சோளம், ஒருவேளை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்ததாம். தொல் பழங்கால உலகம் முழுவதும், நாகரீகத்தின் முதல் வித்து துவப்பட்ட ஆற்றுப்படுகை அனைத்திலும், தானே வளர்ந்த பாசனவழிப் பயிர் முறை, இருந்திருப்பது இயலக்கூடியதே. அது எந்த ஒரு நாட்டிற்கும், ஏகபோக உரிமை உடையதன்று. ஆனால், தென்னிந்தியா உழவுத் தொழிலைக் கற்காலத்திலிருந்தே தெரிந்திருந்தது என்பது, ஆங்காங்குக் கிடைக்கலாகும். உழவுத்தொழில் கருவிகளால் தெரிய வருகிறது. அதற்குத் தொல்பொருள் ஆய்வாளர்களின் மண்வாரிக்கு நன்றி செலுத்துவோமாக. உழுதொழில் பயிற்சியை உணர்த்த சக்கிமுக்கிக் கல்லால் ஆன உழுகலப்பையின் கொழு முனை, சக்கிமுக்கிக் கல்லால் ஆன சுட்ட ஆப்பம் வைக்கும் அடுக்கு ஆகியவை போதும். சக்கிமுக்கிக்கல் ஆப்ப அடுக்குகள் பண்டைச் சுமேரியா மற்றும் எகிப்திய நகரங்களில் பெருமளவில் ஆளப்படுபவனவாம். சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் ஆளப்படுவனவாம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் அத்தகைய ஆப்ப அடுக்கு காணப்படவில்லை. அந்நிலை பெரும்பாலும் செப்புக் கருவிகள் கிடைத்தமையே ஆம். ஆனால், அந்தப் பண்பாடு, நனிமிக வளர்ச்சி பெற்ற பித்தளை அல்லது செம்பு கலந்த கற்காலத்ததாம்.

உலோகப் பண்பாடு பற்றிய சில இயல்புகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் நிலையில், முறையான வேதியல் ஆய்வின் அடிப்படையில், சிந்துவெளியில் பயன்படுத்த பட்ட பொன், மைசூர் மாநிலம், கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து பெற்ற நனிமிகச் சிறந்தது என ஐயத்திற்கு இடன்இன்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சொதாரோ மற்றும் ஹரப்பாவில்