பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

91


தனித்தனியாக முகிழ்த்தனவா? இவை தென்னிந்தியாவுக்கும் கிரீட்டுக்கும், பாபிலோனியாவுக்கும் இடையில், தொல்பழங் காலந்தொட்டே இருந்து வந்த, இடைவிடாப் போக்குவரத்து இருந்தமையினை உணர்த்தவில்லையா? இதுபற்றிய முடிவு செய்வதை உங்களுக்கே விட்டு விடுகின்றேன். மேலும், மலையா தீபகற்பத்தின் கூட்டாட்சியைச் சேர்ந்த “குலா” மற்றும் செலிங்ஸிங் (Kuala Selingsing) பகுதிகளில் காணப்பட்ட உலோகத்தில் செதுக்கி வேலை செய்யப்பட்ட, மங்கிய சிவப்புநிற நேர்த்தியான மணிக்கல்லால் செய்யப்பட்ட மாலை வகையும், கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் வாணிகத்தின் விளைவாக, அழுத்தமான இந்தியச் செல்வாக்கிருந்தமையினை உணர்த்துகிறது.

ஆதிச்சநல்லூர்ப் புதை குழிகளில் கண்டெடுக்கப்பட்ட, மெல்லிய நீண்ட உருண்டை வடிவிலான, பொன் தகடுகளால் செய்யப்பட்ட பொன் முடிமாலை, நீண்டிருப்பது இறந்தவர் தலைகளைச்சுற்றி, அவற்றைக் கட்டும் வழக்கம் இருந்ததை உணர்த்துகிறது. மதுரை மாவட்டத்துச் சில இனத்தவரிடையே, “பட்டயம் கட்டுவது” என்ற முறையில் இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. முழுக்க முழுக்க அதே வடிவிலான, பொன் முடிமாலை, கிரேக்க நாட்டின் கி.மு. 1100 ஆண்டில் சிறப்புற்று விளங்கிய, “மைசினே” (Mycenae) நகரத்திலும் கண்டெடுக்கப்பட்டது வியப்பிற்குரியது. (Ar.S.I.A.R. 1902-3. p. 120) (குறிப்பு:19) எகிப்து நாட்டுக்கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட அந்நாட்டு, 17வது அரச இனத்துப் பொன் கழுத்தனி மற்றும் அரைஞாண்களையும், மேற்கூறிய அணிவகையோடு இணைத்துக்கொள்க. இவை வெளிநாட்டு அணிகளாகவே, கருதப்பட்டன. யாழ் வில்லுக்கான, இந்திய மூலத்திற்கும் இந்திய உரிமை மேற்கொள்ளப்பட்டது. நம் தென்னிந்திய