பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

93


3) இந்தியாவில் மட்டுமே, பொதுவான கலைத் தொழிலுக்குரியதான, சிகப்பு பின்னணியில் வெள்ளை வண்ணக்கோடுகளால் அணிசெய்யப்பெற்ற, குஷ் (Kwsh) நகரத்தில் காணப்பட்ட மங்கிய சிவப்பு நிறம் வாய்ந்த, நேர்த்தியான மணிக்கல்லால் ஆன மாலைகள். இவை கிரீட் நகரிலும் காணப்பட்டன.

4) இந்தியப் படகாகிய, தோல் கொண்டு மூடப் பெற்ற கூடை வடிவிலான பரிசில்களை உபயோகித்தல்.

5) சிந்துவெளியில் உரியதான, எழுத்து மற்றும் காளயிைனைக் கொண்ட முத்திரையினை யொத்ததான, அழுக்குப்போக்கப் பயன்படுத்தப்படும் சவர்க்காரத்தால் ஆன முத்திரை, தொல்பழங்கால, சுமேரியாவைச் சேர்ந்த கிஷ் (Kish) நகரில் காணப்பட்டது.

6) மேற்கு இரான் நாட்டில் உள்ள அழிந்துபோன சுஸா (Susa) நகரில் சங்கும், தொல்பழம் லகேஷ் (Lagash) நாட்டு டெல்லோ (Tello) நகரில் சங்கு அணிகலன்களும் இந்தியாவில் தொல்பழம் காலம் முதல், சங்கு வளையல்களும், போர்க்களத்திலும், இழவுச் சடங்குகளிலும், கடவுள் வழிபாடுகளிலும், பயன்படுத்தப்பட்டன என்பதை இடையே குறிப்பிடுகின்றேன். சங்கைப் பயன்படுத்தும் கலை அறிவு, தென்இந்தியாவில் தொல்பழங்காலத்தில், இரும்பை அறுத்தல், உருக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது.

7) தென் மேற்கு ஆசியாவில், யூபிரடஸ் ஆற்றினை ஒட்டிய சுமேரிய நாட்டுப் பீரிட்டிஷ் நிம்ராட் (Biritish Nimrod) நகரத்திலும், உர் (Ur) நகரத்திலும், தேக்குமரத்துண்டும். செவ்வகிலும் காணப்படுவது.

தொல் பழங்காலச் சமய சமுதாய முறைகளுக்குத் தென்னிந்தியா ஆற்றிய பங்கை ஆராயும் நிலையில், தாய்த்