பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழர் தோற்றமும் பரவலும்


அக்ரோ நகரத்து, “அர்கிவ்” (Arigive) மகளிர் உரோமர்களின் அறிவு ஆற்றல் கடவுளாம் “ஏதெனெ” (Athene) என்ற கடவுளுக்குத் தம் திருமணத்திற்கு முன்னர்த் தம் தலைமயிரைத் தந்துள்ளனர். தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதற்காகத் தங்கள் தலைமயிரைத் தாங்கள் வழிபடும் கடவுள்களுக்குக் கொடுக்கும் வழக்கம், திருப்பதி, சுவாமிமலை, வைத்தீஸ்வரன் கோயில், மற்றும், பல இடங்களில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மணமாகா மகளிர், மணமான மகளிர், ஆண்சிறார்கள், இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இன்றும், நம் வழக்கத்தில் உள்ளதாம். திரெளபதி அம்மனோடு, தடையின்றித் தொடர்புபடுத்தப்படுவதும், சிற்றாசியாவின் தெற்கில் உரோம் நாட்டுப் பழம்பெரும் நாடாம் “கப்படோகா” (Cappadacia) வில் உள்ள, திங்கள், மற்றும் கொடுவிலங்கு வேட்டைக் கடவுளாம் ‘ஆர்டெமீஸ்’ (Artemis) என்ற கடவுளின் வழிபாட்டுக்கு நிகரானதுமான நெருப்பு மிதித்தல் பற்றிக் காண்போம்.

அடுத்து, நாக வழிபாட்டை நாம் காண்கிறோம். அது. தொல்பழங்கால நாகர்களின் குலச்சின்னம். (குறிப்பு: 26) நாகத்தைச் சிவனோடும், கந்தனாம் முருகனோடும் தொடர்புப்டுத்துவது, நாகரீக முதிர்ச்சி அற்ற காலத்துச் சமய வழிபாடாம். பழைய செய்தியை நினைவூட்டுவதாம். தென்னிந்தியாவில், நாகக்கல் என்ற வடிவில் இன்றும் வழிபடுகிறோம். அவ்வழிபாட்டு நெறியில், பல்வேறு வகைகள் உள்ளன. சில கற்கள். ஒரே நாகம் நின்ற நிலையில் உள்ளன. மற்றவற்றில் இரு நாகங்கள் தமக்குள் பின்னிக் கொண்டிருக்கின்றன. ஒரு கோயிலில் அல்லது தெய்வத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் மரம் பொதுவாக, அரசு அல்லது