பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழர் தோற்றமும் பரவலும்


தமிழ்நாட்டின் தலைநகர்கள் ஒவ்வொன்றிலும், திங்களுக்கென்றே தனிக்கோயில் (நிலாக்கோட்டம்) இருந்தது. திங்கள் வழிபாட்டு நெறியின், நினைவுச்சின்னம், வளமும் வன்மையும் கொடுப்பதாக நம்பி, மூன்றாம் பிறைத் திங்களைக் காணும் நிகழ்ச்சியில் இன்றும் இருக்கிறது. சோதிடம் மற்றும் வான்கோள் கணக்குகளும், இன்று. “சாந்திரமான” (Candramana) என அழைக்கப்படும் முறையிலேயே உளது. மேலும் வியப்பிற்கு உரியது என்னவென்றால் மாதம் என்பதன் பெயரே, சந்திரனைக் குறிக்கும், திங்கள் என்பதாம். பண்டைய தமிழ் நாகரீகத்தின் எழுத்தாளர்கள், திங்கள் கடவுளை வழிபட்டனர் என்றாலும், அவர்கள், சமஸ்கிருதப் பண்பாட்டோடு தொடர்பு கொள்ளும்வரை எகிப்தியர்களைப் போல, சந்திர கிரகணம் பற்றிய அறிவினையோ, அதை ஒரு நாளகக் கருதுவதையோ அறிந்திலர். பாபிலோனிய நாகரீகத்தில், ஞாயிற்றைக் காட்டிலும், திங்களுக்கே சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. (குறிப்பு : 28) பாபிலோனிய ஆண்டுக் கணக்கு, திங்கள் முறைக்கே உரியது. திங்களைக் குறிக்கும் ஆப்பு வடிவ குறி “30” என்பதாம். காளை வழிபாடு, பெண்களை அவர்களின் கற்பிற்காகப் பெருமை செய்தல், பெண்களைக் கோயில் பணிக்கென விடுவது போலும், பாபிலோனியப் பழக்க வழக்கம் மற்றும் சமயக் கோட்பாடுகளை இன்டயில் குறிப்பிடுகின்றேன். மேலே கூறியவற்றுள் பெரும்பாலன. இஸ்ரேல் நாட்டு மொழியாம் ஹீப்ரு இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. பாபிலோனியப் பண்பாடு, இன்றைய இஸ்ரேல் நாடு எனக் கருதப்படும் ஜோர்டானுக்கு மேற்கிலும், சிரியாவுக்குக் கிழக்கிலும் இருந்த கேனானுக் (Canaan) குப் பரவியது; அல்லது இயூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப்பழம்பெரும் நகரமாகிய “உர்” (Ur) நரகத்திலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின்மேற்கில் உள்ள