பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

99


ஹாரன் (Haran) வழியாகக் கேனனுக்குக் குடி பெயர்ந்தது என நம்பப்படுகிறது. (குறிப்பு : 29) மேலும், கிரேக்க பழங்கதைகளோடு பெருத்த ஒருமைப்பாட்டினையும் நாம் காண்கிறோம். இந்நம்பிக்கைகள் எல்லாம், சிற்றாசியாவிலிருந்து வந்தன என்றும் நம்பப்படுகிறது. இவ்வகையில், இந்தியாவிலிருந்து பாபிலோனியாவுக்கும், பாபிலோனியாவிலிருந்து கிரேக்கத்திற்கும். கேனனுக்கும் மக்கள் குடிபெயர்ச்சி இருந்தது. இன்று அழிவுறாமல் நம்மோடு நிலைகொண்டிருக்கும். இவ்வழிபாட்டு நெறிகளுக்கெல்லாம், தென்னிந்தியாதான் தாயகம் என்பதையும், அவ்வகையில், இவை அடிப்படை ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்பதையும், தென்னிந்தியாவின் உயிரோட்டமான பண்பாடு என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

தென் இந்தியாவிலும், ஏனைய பிற நாடுகளிலும், தொல்பழங்காலச் சமய நெறியில், காளை வழிபாட்டு நெறி சிறப்பான இடம்பெற்றுள்ளது. சிவனின் வானமாகக், காளை, காலமெல்லாம் வழிபடப்பட்டு வருகிறது. நம் விழாக்களில் ரிஷபவாகன விழாவைச் சிறப்புடையதாக இன்றும் கொண்டாடுகிறோம். மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட இரு தாயத்துகளில் காளை உருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்வது காட்டப்படுள்ளது. இது பண்டைய எகிப்தில் சமயச்சார்பான ஊர்வலங்களில் விலங்குகளைத் தூக்கிச் செல்வதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் வழிபாடும் கடவுள் காளை. ஆகவே, சில விழாக்கள் காளையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கொல்லேறு தழுவுதல் அவற்றுள் ஒன்று. ஆயர்குலத்தவர். தம் மகளிர்க்கு, மணமகளைத் தேர்வுசெய்யும் ஒரு வழக்கத்தைச் சிலப்பதிகாரம், தனியே குறிப்பிடுகிறது. எவனொருவன் காளைமீது பாய்ந்து, அதை