பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழர் தோற்றமும் பரவலும்


போலவே, கிரீட் நாட்டிலும், குடும்ப வாரிசு, பெண்வழியே ஆகும்.

எடுத்துக்கொண்ட ஆய்வுக்கு ஆன முடிவை உடை வகையில் காணமுற்படினும், இங்கும், மறுக்க இயலா ஒருமைப்பாட்டினைக் காணலாம். கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில், ஆடவர் இடுப்பு ஆடையை மட்டுமே உடுத்தியிருந்தனர். மேலும் அவர்கள். மிதியடி, மற்றும் மிதிகால் மறையும் அடிபுதை அரணங்களை அணிந்திருந்தனர். பொதுவாகத் தலையின் பின்பக்கமாக இடுப்புவரை தொங்கும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தனர். தலைமயிரை ஒப்பனை செய்வதில், வியத்தகு முறை ஒன்று கிடைத்துள்ளது. ஒக்கூர்மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் ஒருவர், நாடாளும் அரசன் அழைக்கத் தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறாள். மகனின் நீண்ட தலைமயிரை, ஒப்பனை செய்யும்போது, அம்மயிரை ஒன்று திரட்டி, யூபிரடஸ் ஆற்றுப்பள்ளத்தாக்கு, தொல்பழம் நிலப்பகுதியாகிய “சுமர்” (Sumer) நாட்டு முறைப்படி, முடித்து அனுப்பி இருக்கிறாள். மோகன்லாதரோ, பல்வேறு வகையான தலைமயிர் ஒப்பனையைக் காட்டுகிறது. என்றாலும், அவை அனைத்தும் நீண்டு தொங்கும் மயிர் உடையனவே. புறநானூறு அளிக்கும் அகச்சான்று, கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதும், பண்டைத் தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததுமான, வெறுக்கப்பட்ட மயிர்முடியாகும் என்பதைக் காட்டுகிறது.

வகையால் எண்ணில் அடங்காதனவாகிய பழக்க வழக்கம் மற்று இன்பக் களியாட்டங்களில் இங்கு ஒன்று அல்லது இரண்டைக் குறிப்பிடுகின்றேன். பழக்கப்பட்ட உயிரினங்களில் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தது, முருகனின் கொடியாகிய மயில் ஆகும் (குறிப்பு: 36), கிரேக்கக் கடவுளாகிய அப்பாலோவின் சின்னமும் அதுவே. அப்பாலோவை முருகனாக அடையாளம்