பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தமிழர் தோற்றமும் பரவலும்



சென்னை வாசி, பணியாளனாயினும், அரசுப் பணியாளனாயினும், உலகெங்கும், தன்னிடம் உள்ள சிறந்தன அனைத்தையும், மக்கள் சமுதாயத்திற்கு வழங்குவோனாக உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றான். நல்லகாலமாக, இன்றும் அழியாது நம்மோடு இருக்கும் இப்பழம்பெரும் பண்பாடு, நாளுக்குநாள், மேலும் மேலும் வலுப்பெறுமாக!