பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் சொற்பொழிவின்
குறிப்புகள்

1) ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக் கதை குறித்துத் திருவாளர் எல். தெலபொர்டே (L. Delapore) அவர்களின் மெசபடோமியா என்ற நூலைக் காண்க. (Kegan Paul, 1925; Page: 20-21; 138-9; 207-8; Page 31.1-26. சபே (Sabae) தென் அரேபியாவின் பழம்பெரும் நாடு, விவிலிய நூலில் குறிப்பு 1 அவில் The Joktanite Shiba என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.

ஷீபாவின் பேரரசு, வடபகுதி நீங்க உள்ள அனைத்து அரேபியா (Arabia Felix) வைச் சார்ந்த, யேமன் நாட்டின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டுவிட்டது. அதன் முக்கிய நகரங்கள், பெரும்பாலும், அடுத்தடுத்துத் தலைநகராக அமைந்த, ஸெபா ( Seba); ஸனியாஸ் (Sanias) மற்றும் ஸெபர் (Sephar) முதலியனவாம். “லெபர்” என்பது பெரும்பாலும் ஒரு நகரத்தின் பெயரும், பொதுவாக நாட்டையும், நாட்டு மக்களையும் குறிக்கும். “குஷ்” (Cush) என்பானின் மகனாகிய “ராமஹ்” (Raamah) என்பானின் மகனாகிய ஷீபா (Sheba) என்பவன், பர்ஷிய வளைகுடாவின் கரைகளில் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்திருந்தான். இந்த ஷீபாதான், ஜோக்-ஷன் (Jokshan) என்பானின் மகனாகிய, மற்றொரு ‘ஷீபா’வுடன் சேர்ந்துகொண்டு பாலஸ்தீனத்தோடு, இந்தியா கொண்டிருந்த போக்குவரத்தை மேற்கொண்டிருந்தான்.