பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

107


பர்ஷியன் வளைகுடாவில் அராபியக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள, “பகாரியன்” தீவுக் (Baharein Islands) கூட்டத்தில் ஒன்று. டேடன் தீவு. இது, ஒருபக்கம் பொய்னிஷியாவுக்கும், பர்ஷிய வளைகுடாவுக்கு இடையிலும், இன்னொரு பக்கம், பொய்னீஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலும் போக்குவரத்து இருந்தது என்பதைக் காட்டுகிறது. பொய்னீஷிய வர்த்தகம், டேடனுக்கு அப்பால், பெருமளவில் இருந்த நாடுகள், இந்தியா தவிர்த்து வேறு இருக்க இயலாது. இது வணிகப் பொருள்களால், போதுமான அளவு உறுதி செய்யப்படுகிறது. கி.மு. 1016 முதல் 976 வரை இஸ்ரேல் ஆண்ட மன்னன் சாலமன், தன் தந்தை டேவிட், மேற்கொண்டிருந்த வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தான். மேலும், பொய்னீஷியத் துறைமுக நாடாம் டயரை (Tyre) ஆண்டிருந்த அரசனோடு வாணிக ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டான். இவ்வகையால் ஒன்றுபட்ட வாணிக வங்கங்கள், ஒப்பீர் (0phir) நாடு, மற்றும் கிழக்கு நாட்டுப் பொன்னைப் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு சென்றன. விவிலிய நூலின் பொதுப்பிரிவு இரண்டில், முதல் பிரிவில் (Old Testament) வரும் “ஒப்பீர்” என்ற சொல்லின் பொருள் காண்பது, வரலாற்றுப் பேராசிரியர்களிடையே, ஒரு பெரிய வாதப்பொருளாம். சிலர், அதைப் பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பண்டைய துறைமுகமாம் “ஸோபாரா” வாகக் கொள்கின்றனர். சிலர், சமஸ்கிருத “அப்ஹீர” (Abhira)அல்லது, சிந்து நதியின் முகத்துவாரமாகக் கொள்கின்றனர். வேறுசிலர், அரேபியா அல்லது “மேஷனாலான்ட்” (Mashonaland) நாட்டில் உள்ள ஓர் இடமாகக் கருதுகின்றனர்.

சாலமன் அவர்களின் பொன்னால் ஆன அரியனை, விலைமதிக்கவொண்ணா அருங்கற்கள், பொன்னால் அடித்துச்