பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழர் தோற்றமும் பரவலும்


பண்டைய எஸியோன் ஜெபர் (Ezion Geber) அதாவது இன்றயை அகபா (Akaba) மற்றும், பாலஸ்தீனத்திலிருந்து பாயும் ஜோர்டன் ஆற்றிற்குக் கிழக்கில் உள்ள பெட்டரா (Petra) ஆகிய நகரங்கள் வழியாக, மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள லெவன்டினே (Levantine) துறைக்குக் கொண்டு செல்வதையே விரும்பினர் என்பது காட்டப்பட்டது. எச்.ஜீ. ராலின்சன் (H.G. Raulinson) அவர்களின், “இந்தியாவுக்கும் மேலை உலகிற்கும் இடையிலான போக்கும் வரவும்” (Intercourse between, India and western world: 1926, Cambridge p. 89-90) என்ற நூலைக் காண்க.

4) திருவாளர் இ.பி. கெளல் அவர்கள் பதிப்பித்த 1897 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அகராதி, பகுதி. 3 பக்கம் 83) பாபெரு (Baberu) என்ற நிலம், பாபிலோன் ஆகும். இந்திய வணிகர்களால், இந்தியாவிலிருந்து முதலில் ஒரு காக்கையும், பின்னர் ஒரு மயிலும், பாபிலோனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

5) உரோமப் பேரரசின் கருவூலத்திலிருந்து, உரோம நாணயம் வடித்தல் குறித்து, உரோம் நாட்டு, அரசியல்வாதியும், எழுத்தாளருமான பிளைனி கூறுவது:

“எவ்வளவு குறைவாக மதிப்பிட்டாலும், இந்தியா, சேரநாடு, மற்றும் அரபுநாடுகள், ஆண்டுதோறும், உரோமப்பேரரசிலிருந்து, 10 கோடி உரோம நாணயம், செஸ்டெர்ஸெஸ் (Sesterces) ஐ வடித்துவிடுகின்றன எனக் கூறுகிறார் திரு. பிளைனி, “எங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கும், எங்கள் மகளிர்க்காகவும் நாங்கள் அவ்வளவு அரிய விலையைக் கொடுக்கிறோம். மீண்டும், மற்றுமொரு முக்கியமான இடத்தில், “இந்தியா போக்குவரத்தில் ஏற்பட்ட செலவோடு பழைய விலை போல நூறு மடங்கு விலைக்குப் பண்டங்களைக் கொடுத்து விட்டு, “செஸ்டெர்ஸெயை” எடுத்துக் கொள்கிறது எனக்கூறியுள்ளார்.