பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழர் தோற்றமும் பரவலும்


நன்றி தெரிவிக்கும். முகத்தான், முசிறியில் (இன்றைய க்ரேங்கனூர்) மன்னன் அகஸ்டஸூக்குக் கோயில் கட்டப்பட்டிருப்பதுமாகிய தென்னிந்தியச் சேர நாட்டிலிருந்து மிளகு வந்தது. ஆகவேதான், ஆப்கானிஸ்தானத்தின் வட கிழக்குப் பகுதியாகிய பாக்டீரிய நாட்டவர் (Bactrians) (குஷான்கள்) அல்லராயின், ஷேரெஷ் (அதாவது சேரர்) அரசியல் தூதவர் ஆயினர்.

2) தன்னுடைய முத்தால் பெருமை பெற்றதும், கிரேக்கர்களால், “பாண்டியோன்” எனப் பெயர் சூட்டப்பட்ட அரசர்களால் ஆளப்பட்டிருப்பதும் ஆகிய பாண்டி நாட்டிலிருந்தும் வணிகப் பண்டங்கள் வந்தன. அவர்கள் தமிழ்நாட்டிற்கே உரிய செய்பொருட்களாகிய விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள், சில வேளைகளில் யானைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். சோழப் பேரரசும் அரசியல் தூதுவரை அனுப்பியது. இத்தூது அனைத்தும், அலெக்ஸ்யாண்டிரியாவையும், சிரியாவையும் சேர்ந்த கிரேக்கர்களால், முடிந்தால் இடைத்தரகர்களாகிய அராபியர்களை அகற்றுதற் பொருட்டுத் திட்டமிட்டு மேற் கொண்ட வாணிகத்தூதுக்களாம். (E.H.Warningtonp,page:37).

உரோம நாணயம், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, உண்மையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும், விலைமலிந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களுக்கு உலகப் பெருஞ் சந்தையில், குறைந்த பண்டமாற்று மதிப்பே இருந்தது. தமிழர்கள் உரோம நாணயங்களை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மாவட்டங்களில், உரோம நாணயங்களால் ஆன உரோம நாணயச் செலாவணி, திட்டமிட்டு நிலைகொண்டு விட்டது. தரத்தில் குறைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களை உரோமர், குறைந்த பண்டமாற்றிற்கே ஏற்றுக்கொண்டனர். மிகவும்பிற்பட்ட