பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

117


வாய்ந்தது. மிக்க அமைதி நிலவுவது மேலை நாட்டு வணிகர்களால், மிகவும் எளிதில் அடையக் கூடியது. பார்பரிகான் (Barbaricon) “பரியகஜ” (Barygaza) போலும் இடங்கள், பர்சியர், அராபியர், சிரியர், பால்மைரெனியர், குஷானியர் மற்றும் வேறு சில மக்களால், ஏனைய தமிழ்நாட்டு இடங்களைக் காட்டிலும் எளிதில் அடையப்பெற்றது. திருவாளர் “பெரிபுலூஸ்” (Pariplus) அவர்கள், தம்முடைய காலத்தில், தென் கோடித் தமிழ்நாட்டு முத்தும், பல்வேறு வழிகளில் கிடைத்த ஆமை ஓடும், வாணிகம் காணும் பொருட்டு, மலபார் நாட்டு வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும், இந்திய இரும்பு, (சிறப்பாக, மத்திய இந்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்து நகரத்தைச் சேர்ந்தது) வடமேற்கு இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்ட்டது என்றும், இலங்கையின் செய் பொருள் (சிறப்பாக இலங்கை, பர்மா, சையாம் நாட்டு நீலமணிகள்) இந்தியாவின் கிழக்குக் கரைத்துறை முகங்களோடு தொடர்பு கொண்டிருந்த மலபார் வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும் கூறியுள்ளார். (See. Warmington P.277-917).

7) பண்டைத் தமிழர்கள் மூவகை மரக்கலத்தைக் கண்டறிந்திருந்தனர். அவற்றுள் ஒன்று மீன்பிடி படகு, இரண்டு ஆற்றில் ஒடும் சிறு மரக்கலம். மூன்றாவது, கடலோடும் பெரிய மரக்கலம். மீன்படி படகை எடுத்து கொண்டால், அரபு நாட்டு மாதிரியானதும், பண்டங்களை ஏற்றிச் செல்வதும் ஆகிய சிறு படகு, மற்றும் பொய்னீஷியரின் படைக்கலம் பொருத்திய தட்டையான அடிப்பாகத்தை உடைய கப்பலை ஒத்திருப்பதும், திருவாங்கூர் நீர் விழாவில் பயன்படுத்தப் பெறுவதும் ஆகிய, துடுப்பால் உந்தப்படும் சிறு படகு போலும் உள் நாட்டு மாதிரிகளைக் காணலாம். கன்னியாகுமரிக்கு அப்பால், நூறு மைல்