பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழர் தோற்றமும் பரவலும்


வரையும், பரதவர் கட்டுமரங்களையும், துடுப்பால் உந்தப்படும் மலபார் நாட்டுப் படகு போலும் சிறு படகுகளையும் கொண்டு செல்வர். இவை, நீண்டு பருத்த மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்றைப் பனைநார்க் கயிற்றால் ஒன்று சேரக் கட்டப்பட்டவை. இச்சிறுபடகு, மெஸ்படோமிய அராபியர்கள், துடுப்பால் உந்தப்படும் தங்கள் மரக்கலங்களுக்கு இட்டு வழங்கும் வள்ளம் என்ற பெயரால் அழைக்கப்படும். பெரிய உந்து படகுகளில் மீன் பிடிக்க எழுவர் அல்லது எண்மர் கடல் மேல் செல்வர்.

கோடிக் கரையில், இன்றும் வழக்காற்றில் இருக்கும் (திருட்டுப்படகு எனும் பொருள் உடையதான) கள்ளத் தோணி, படகு வகைகளில் சிறப்புடைய ஒன்றாம் கண்ணேறுபடுதலால் உண்டாகும் கேட்டினைத் தவிர்த்தல் பொருட்டுக் கை முத்திரை, இடுதல், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாம். இரு பக்கங்களிலும் குறை தீர்க்கும் குறியாம் “உ”, குதிரை வழிபடும் பெண் தெய்வத்தின் பெயர்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும். மீன் பிடிக்கப் போவார், போவதன் முன்னர், மாரியம்மனை வழிபடுதல் கோடிக்கரையில் இன்றும் வழக்காற்றில் இருக்கிறது. மேலும் ஒரு வியப்பு என்னவென்றால், இவ்வழக்கம் உலகெங்கும் உள்ள வழக்கமாம். கள்ளத் தோணிக்கு உரியவர்கள் கரந்துறை வெள்ளாளர் என அழைக்கப்படுவர். அஜந்தா குடைவரைகளில் கி.பி. 600 ஆண்டைய வண்ண ஓவியங்களுள், மூன்று பாய்மரங்களோடு கூடிய கப்பல் மற்றும் அரசு விழாக்களில் பயன்படும் வள்ளப்படகு ஆகியவற்றின் ஓவியங்கள் காணப்படுவது காலாகாலமாகக் பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தினைக் காட்டுகிறது. இந்தியாவுக்கு வெளியில், கிரேக்கர்களும், உரோமானியர்களும், பண்டைய எகிப்தியர்களும், இவ்வழக்காற்றைப் பின்பற்றினர். சீனாவைச் சேர்ந்தனவும், இந்தோ-சீனாவைச் சேர்ந்தனவும், வட இலங்கையைச்