பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

119


சேர்ந்தனவும் ஆகிய சீனக்கடல் ஓடவல்ல, அடித்தட்டையாக உள்ள மரக்கலங்களில் கண் பொறிக்கப்பட்டது என்பது சொல்லத் தேவை இல்லை. கிருஷ்ணா வரையான கிழக்குக் கடற்கரையில் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. அதற்கு அப்பால், இதனினும் பழமையானதான கட்டுமரம் வழக்காற்றில் இருக்கிறது. கோதாவரி கழிமுகங்களில் கால் அணியாம் ஷூ வடிவிலான தோணி, காணக்கூடிய ஒன்றாம்.

ஆற்றில் ஓடவல்ல தென்இந்திய மரக்கலம், நான்கு வகைப்படும். தஞ்சையிலும் வங்காளத்திலும் இன்றும் வழக்காற்றில் இருக்கும் வாழைமரத்தண்டுகளால் ஆன கட்டுமரம் நனிமிகப் பழமையானது. மேற்கூறியது போலவே நனிமிகப் பழமையானதும், வேலூரில் இன்றும் காணக்கூடியதுமான மட்கலமிதவை, இரண்டாவது இனம் மூன்றாவது வகை, காவிரி, துங்கபத்திரை, டைகிரிஸ், மற்றும் இயூபிரட்டஸ் ஆறுகளில் விடப்படும் பரிசில், தாம் காய்ச்சிய மது வகைகளை டைகிரிஸ் ஆற்றின் வழியே இயூபிரட்டஸ் ஆற்றுப் பகுதியும் பர்ஷிய வளைகுடாப் பகுதியுமான சால்டியன் (Chaldeen) நாட்டு நகரங்களுக்குக் கொண்டு செல்ல, அஸ்லிரிய மது வணிகர்களால், தோலால் மூடப்பட்ட பரிசில்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். இப்பரிசில் வகைகள், பரிசிலுக்குத்தார் பூசப்பட்ட மெழுக்குத் துணிகள், பயன்படுத்தப்பட்ட அயர்லாந்து வரையும் பயணம் செய்ததாகத் தெரிகிறது. பனைமரங்கள் இரண்டை ஒன்றாக மூட்டிக் குடைந்து செய்யப்பட்டு “சாங்கடம்” (Sangadam) என்ற பெயரில், கோதாவரித்துறை முதல், தென்னிந்தியா மற்றும் இலங்கை வரை காணப்படும் பரிசில் நான்காவது வகை.

“சுருயல்” (Surual) என வழங்கப்படும் கடல் ஓடும் கப்பல்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இவை, நீண்ட கிடக்கையிலான,