பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

123


பெர்ராண்ட் (Ferrand) அவர்கள் கூற்றுப்படி, கி.மு.மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டது. திருவாளர் க்ரோம் (Krom) அவர்கள், அத்தீவுகளில் மக்கள் குடியேற்றம். கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்தில் கூட தொடங்கப்படவில்லை என்று கருதுகிறார். திருவாளர் பெல்லியோட் (Pelliot) அவர்கள் கருத்துப்படி, கம்போடியாவின் தென்பகுதி மற்றும் கொச்சின்-சைனாவை உள்ளடக்கிய “ப்யூனன்” (Fuman) எனும் இடத்தில் மக்கள் குடியேற்றத்தைத் துவக்கி வைத்த திரு.கெளண்டினியன் (Kaundinya) அவர்கள், குறைந்தது கி.பி முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வைக்கப்படவேண்டும். “சம்பா” பகுதியிலும் அதற்கும் அப்பாற்பட்ட தெற்கு அன்னம் கழித்தே இக்குடிபெயர்ப்பு மேலும் நூறு ஆண்டுகள் கழித்தே நடைபெற்றிருக்க வேண்டும். சுவர்ணதீபம் அதாவது பொன்தீவு என அழைக்கப்படும் சுமத்ரா மற்றும் யவபூமி என்றும், பார்லே நாடு (Land of Barley) என்றும் அழைக்கப் பெறும் ஜாவா முதலியன, சீன யாத்திரீகன் அடியிட்ட குப்த அரசு காலத்தில் புகழ் பெற்றும் விளங்கின.

“மேற்கே, தென் ஆப்பிரிக்க முனையை அடுத்துள்ள மடகாஸ்கர் முதல் கிழக்கே, வியட்நாம்நாட்டின் ஒரு பகுதியாகிய தொங்கிய (Tongking) வரை பரவியிருந்த இந்தியச்செல்வாக்கின் மக்கள் குடியேற்றப்பரவல், வெறும் பொருள் ஈட்டும் பெருமுயற்சி மட்டும் அன்று. அது சமய முடிவுகளையும் கருத்தில் கொண்டது. வைணவம், சைவம், மற்றும் பெளத்தம் ஆகிய சமயங்கள் கொடிய போராட்டத்திற்குக் கொண்டுபோய்விடும் சமய வேறுபாடுகளும் இடம் கொடாமல், புதிய மண்ணில் வேர் ஊன்ற முற்பட்டன. ஆஸ்திரேலியத் தீவுகள் மற்றும், மத்திய, தென்பசிபிக் கடல் தீவுகள், இந்தியக் குடியேற்றப் பகுதியாக ஆனது. கொடும் போரின் விளைவால் நேர்ந்ததாகத் தெரியவில்லை.”