பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழர் தோற்றமும் பரவலும்



(Paul Masson-Cursel. Helena De Willman-Grabowska, and Philipp Stern அவர்களின் பண்டை இந்தியாவும் பண்டை இந்திய நாகரிகமும் (Ancient India) and Indian Civilization. p. 110-11 | Kegan-Paul, Trench, Trubner & co., Ltd., 1934).

10) மேலைக்கடல் தீவுகள், எகிப்து, ஆப்பிரிக்கா ஆகியவை ஒருபக்கமாகக் கீழ்க்கடல் தீவுகள், வட அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள யுகாடன் (Yucatan) மெக்ஸிகோ ஆகியன ஒருபக்கமாக இரண்டிற்கும், இடையில் நிலவிய இணைப்புக்கான அடையாளங்கள்:

ஜப்பான் நாட்டு சுகுவில் (Sukuh) அழிவுறாமல் விடப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கும் வடஅமெரிக்காவின் தென்மேலைப் பகுதிகளாகிய யுகாடன் மற்றும் மெக்ஸிகோவின் மாளிகைகளுக்கும் இடையில் நிலவும் ஒருமைப்பாடு நினைவில் கொள்ளத்தக்க ஒன்று. இதிலிருந்து, திருவாளர் பெர்கூஸன் (Perguson) அவர்கள், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கட்டிடம் கட்டும் இனத்தவர், ஜாவாவில், தற்காலிமாகக் குடிவந்த, அதே கட்டிட இனத்தவரே என முடிவு செய்கிறார். அங்ஙனமாக, ஜாவா, தன்கட்டிடக்கலையினை, எங்கிருந்து எவ்வாறு பெற்றது என்பதே அடுத்த கேள்வி. இந்தியா குறிப்பாகத் தென்இந்தியாவே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில், பண்டைய ஜாவா மக்களை, அக்கலைத் துறைக்கு ஈர்த்திருக்க வேண்டும் என்பதே அதற்கு விடையாதல் வேண்டும். .

“ஒரு நாட்டு வீடுகளின் நுழைவாயில், பண்டை எகிப்திய கோபுரவாயில்களைப்போல், எடுத்துக்காட்டுக்கு நைல்நதிக்கரை “கர்னக்” (Karnak) எனும் இடத்தில் உள்ளதுபோல் உள்ளது. என்றாலும், இது போலும் வடிவங்கள், சுகுவில் உள்ளதைக் காட்டிலும் அதிக ஒருமைப்பாடு உடையன சொகொட்டோ,