பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழர் தோற்றமும் பரவலும்


பெயர் சூட்டு தலைவனாக இல்லையாயினும், பிராமணப் பண்பாட்டுத் தலைவனாக வளர்ந்திருக்கக் கூடும்.

மத்திய ஜாவாவில் டியெங் (Dieng) மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட சஞ்சயாவில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பழைய சிவா கோயிலுக்கு அருகில், தென்னிந்திய மூலச்சாயல் உடைய கணேசர், துர்க்கை சிலைகள் உள்ளன. பிரம்மணம் (Prambanam) என்ற இடத்தில் உள்ள இந்து சமயக் கோயில் இடிபாடுகளில் 9, 10, 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தென்னிந்தியச் சிலைகளின் வடிவமைப்பினையும், உருவத்தால் பொருள் உணர்த்தும் தன்மையினையும் நினைவூட்டுவதாகக் கருதப்படும் சிவன், விஷ்ணு, பிரமன் மற்றும் திரிமூர்த்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாளர் ஒ.சி. கங்கோலி அவர்கள் தம்முடைய “தென்னிந்திய வெண்கலங்கள்” என்ற தலைப்புள்ள ஆங்கில நூலில், உமா-மகேஸ்வர மாதிரி, தென்னிந்திய சிலை ஒன்று, உண்மையில் எடுத்துச் செல்லப்பட்டதற்கான ஐயத்திற்கு இடம் இல்லா அகச் சான்றினைக் குறிப்பிட்டுள்ளார்.

எட்டு ஒன்பது நூற்றாண்டுகளில், ஜாவா இயல்புடையதாக ஆக்கப்பட்டதும், அதன் விளைவாக, அதன் இரண்டாம் நிலை இந்துவாம் தன்மையைப் பெற்றதும் ஆகிய பாலித்தீவில், தென்னிந்தியப் பல்லவ கிரந்த எழுத்து திருந்திய வடிவில் வழக்காற்றில் இருந்தது போன்ற, இந்தியாவிலிருந்து நேரிடையாக இடமாற்றம் இருந்தமைக்கான அகச் சான்றுகள் உள்ளன. திருவாளர், ஸ்டுட்டெர்ஹெம் அவர்களின் “பண்டைய பாலி இனக் கலையில் இந்தியச் செல்வாக்கு” என்ற நூலையும், டாக்டர் பி. சிச்சப்ஹர அவர்களின் “பல்லவர் காலத்தில் இந்தோ-ஆரியப் பண்பாட்டின் விரிவாக்கம்” என்ற நூலையும் காண்க. இந்தியாவிற்கு நனிமிகத் தொலைவான நாடுகள் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் பண்பாடு, பல்லவ ஆவணங்கள்,