பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

129


அவை போலும் நிகழ்ச்சிகளுக்கான சிறு குறிப்பினைத்தானும் பெற்றிருக்கவில்லையாயினும் பல்லவர்கள், அத்தொலை நாடுகள் வரையும் தங்கள் அரசாணையைச் செலுத்தி, பரந்த பெரிய காலனி , ஆட்சியை நிறுவி இருக்க வேண்டும் என்ற யூகத்தை உறுதி செய்யவல்ல அசைக்க முடியாத பல்லவ முத்திரையினைக் கொண்டுள்ளது.

11) தென்இந்தியாவுக்கும் தென் சீனாவுக்கும் இடை யிலான தொடர்பு:

தென் சீனாவோடு கொண்டிருந்த தொடர்பைப் பொறுத்த வரையில், அன்னம் எனவும் அழைக்கப்படும் சம்பா நாட்டில் வோகன் (Vocan) எனும் இடத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், இந்தியா உடனான தொடர்பு அதற்கு முந்திய காலத்தில் இல்லையாயினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு போலும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. உரோம வணிகர்கள் கடல் வழியாக கட்டிகராவுக்கு அதாவது கொச்சின் சீனாவுக்குக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தனர். கி.பி. 166-ல் அவர்களில் ஒருவர் இன்றைய தொங் கிங் நகராகிய கியஒ-சு (Kiao-Cho). துறையில் இறங்கினர்.

இந்தோசீனாவில் உள்ள இந்தியர் குடியிருப்புகளில் இருந்தோ அல்லது தம் தாயகமாம் இந்தியாவிலிருந்து நேரிடையாகவோ, கடல் வழியாக வந்த புத்த பிக்குகளால் தென்சீனா பழங்காலத்திலேயே ஆட்கொள்பபட்டுவிட்டது. தென்சீனாவைச் சேர்ந்த பெளத்தப் பண்பாடு, தென் இந்தியாவின் தெளிவான முத்திரையினை ஏற்றுள்ளது. திருவாளர் பி.கே. முகர்ஜி அவர்களின் “சீனாவிலும், தொலைகிழக்கு நாடுகளிலும் இந்திய