பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




தமிழர் தோற்றமும் பரவலும்


முதல் சொற்பொழிவு


பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள்

வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, மற்றும் இலங்கையின் பழமை, நிலஇயல் அறிவின் தொடக்க காலத்துக்கே கொண்டு செல்கிறது. ஏழ(ற)த்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான 'முந்தைக் கேம்பிரியன்' என்ற நிலஇயல் ஊழிக்காலத்திற்கும் (Pre cambrain Era), 240 கோடி முதல் 65 கோடி ஆண்டு வரையான 'மெலோ ஸோயிக்' என்ற இடைப்பேருழி ஊழிக்காலத்திற்கும் (Mesozoic Era) இடைப்பட்ட காலமாம் பலேயோஸோயிக் (Palaeozoic) தொல்பேரூழி என்ற ஊழிக் காலத்திலிருந்தபடி மூன்றுபக்கங்களிலும் கடலால் சூழப்பெற்ற இந்தியத் தீபகற்பம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நடுவிடமான ஆஸ்திரேலியா முதல், தென் அமெரிக்கா வரையான கோண்டவனம் என்ற பெருநிலப் பரப்பு இருந்தது. மெலோஸோயிக் ஊழியின் இறுதிக் காலத்தே, கோண்டவனம் என்ற இப்பெருநிலப்பரப்பு உடைந்துவிட்டது. பெரும்பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலாயின தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவும்,