பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

137


ஹோகர்த் அவர்களின், கேம்பிரிட்ஜ் பழைய வரலாறு (The Cambridge Ancient History).

16. அரேபியாவின் தென்கிழக்கே, ஓமன் கடலில் உள்ள “சொகொட்ரா” (Socotra) என்ற தீவில் வாழ்பவரால் தலைநகர் முஸ்காட் (Muscat) டின் இன்றும் வழக்காற்றில் உள்ளவை திருவாளர் வில்சன் அவர்களின் “பர்ஷிய வளைகுடா” என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம், 8, 21, 27)

பழங்குடி இனத்துக் கடலோடிகள் மிகவும் பழமை விரும்பிகள். அவர்களின் தொடக்க காலச் சிறு படகு, கற்காலத்து மனிதன் கடலோடு போராடியதைக் காண உதவும் எனச் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மானியா இடத்துப் பழங்குடியினரை, இந்தோனேஷியாவில் அடையாளம் காணலாம்.

ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள நியூஸிலென்ட் நாட்டுப் பழங்குடியினராகிய ‘மாவோரி’ (Maoris) மக்களின் மூதாதையர் பொலினீஷிய இனத்தவர் ஆவர். தொடக்கத்தில் இந்தோனேஷியாவில் இருந்து வந்து, பசிபிக் பெருங்கடலில் மேற்குக் கோடியில் உள்ள தீவுகளுக்குக் கடல் வழியாகச் சென்று, அங்கிருந்து பிஜித் தீவுக்கும் மத்திய பொலினீஷியாவுக்கும் சென்று பரவினர். அவர்கள் மலேனேஸியாவின் தொல் பழங்குடியினரை வென்று, தங்களோடு இணைத்துக்கொண்டனர் எனக் கூறுகின்றது ஒரு பழங்கதை.

இந்தோனேஷியா, மற்றும் பொலினீஷியாவைச் சேர்ந்த பழங்குடியினர். கட்டிடக் கலைத் துறையிலும், கடல் ஓடு துறையிலும், மிகப் பெரிய அறிவை வளர்த்துக்கொண்டனர். பசிபிக் கடலில் ஓடவல்ல. சாதாரணச் சிறு படகுகள், அண்மைக்கால நிலையோடு ஒப்பிட்டு நோக்க மதிக்கத் தக்க,