பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

139


நூற்றல், நெய்தல் ஆகிய தொழில்களில் அவர்கள் கைவந்தவர்கள். அவர்களின் படைக்கலங்களும் வேட்டைக் கருவிகளும், வில்லும், அம்பும் ஈட்டி அல்லது வேல்கம்பு, கோடரி, குத்துவாள் மற்றும் தண்டு முதலியனவாம். நீண்ட பட்டாக்கத்தி காணப்படவில்லை பகைப் படை பாயாவாறு அணிந்துகொள்ளும் மார்புக்கவசம் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்த, செப்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட கைக் கோடரி அரிவாள், இன்பம், உளி கூரிய மென்கத்தி, கோடரி முதலியனவாம். சில சமயம் சக்கி முக்கிக் கல்லிலும், கடிய கல்லிலும் கூடச் செய்யப்பட்டன. தானியங்களை அறைக்க, அவர்கள், அம்மி, குழவியையும் கால் கதியொடு கூடிய அறைக்கும் கருவியையும் பயன்படுத்தினர் ஆனால், வட்ட வடிவான மாவறைக்கும் கல் இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை. அவர்களின் வீட்டுக் கலங்கள் எல்லாம், பொதுவாகச்சக்கரத்தில் சுற்றிச்செய்து கட்டு இங்கும் அங்குமாகப் பல மாதிரிகளில் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்ட்ங்களாம். மிக அருகி. செப்பு, வெண்கலம், அல்லது வெள்ளிப் பாண்டங்களையும் ஆண்டனர். செல்வந்தர் வீட்டு அணிகலன்கள், விலை உயர்ந்த உலோகங்களாலும் செப்பாலும் பெய்யப்பட்டன. சில பொன் முலாம் பூசப்பட்டன. தந்தத்தாலும், ஏழைகளுக்குப் பொதுவாகக் கிளிஞ்சல்களால் ஆனவை. பெருமளவில், வழக்கத்தில் இருந்த சிறு உருவச்சிலைகளும் விளையாட்டுப் பொம்மைகளும், சுடுமண்ணால் செய்யப்பட்டவை. யூபிரட்ஸ் ஆற்றங்கரை நகராம் சுமரிலும், பொதுவாக மேற்கு நாடுகளிலும், பொதுவாக வழக்கத்தில் இருப்பது போல, கிளிஞ்சல்களாலும், சுட்டு வண்ணம் தீட்டப்பட்டனவாலும் செய்யப்பட்டவை ஆளப்பட்டன. சொந்த அணிகலன்களுக்கு மட்டுமல்லாமல் கல்பதித்து அணி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன எழுத்துமுறை அறியப்படவே, சிந்து நதிநீர மக்கள் தாமும்,