பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழர் தோற்றமும் பரவலும்



ஆப்பிரிக்காவும் மட்டும் அக்காலகட்டத்திலும் பிரிவுறாமல், பெருங்கற் பாறையாம் பாலத்தால் இணைந்திருந்தன. அவ்வாறு இணைந்திருந்த அப்பகுதிக்கு “லெமூரியா” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. மெஸோஸோயிக் ஊழிப்பருவத்தைச் சேர்ந்த 200 முதல் 150 கோடி ஆண்டுகள் வரையான “ஜுராஸிக் (Jurassic) என்ற வரலாற்றுக் கால கட்டத்தில், தென் அமெரிக்காவில் வடகிழக்கில் உள்ள பிரேஸின் நாட்டில் உள்ள ஜலுரா என்ற மலையில் பாறை தோன்றிய காலம் இந்தியத் தீபகற்பத்தின் கீழ்ப்பால் பகுதி கடலுள் மூழ்கிவிட, வங்காள விரிகுடாவின் தோற்றத்திற்கு வழிவகுத்து விட்டது. (சொற்பொழிவின் ஈற்றில் உள்ள குறிப்பு:1 காண்க). பனிக்கட்டி காலமாம் ‘கிலேசியல்’ (Glacial) ஊழியின் இறுதியில் தாழ் நிலையில் இருந்த கடல்மட்டம் பனிப்பாறைகள் உருகியதால் மீண்டும் உயர்ந்து நனிமிகப் பரந்த கடல் நீரடிப்பாறை உருவாகும் நிலைக்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தில்தான் சுமத்திரா, ஜாவா மற்றும் போர்னியோ போலும் கிழக்கிந்திய நாடுகள் பிரிவுண்டு தனித்தனி நாடுகள் ஆயின. இந்நிலஇயல் நிகழ்ச்சி. வேதம், இதிகாசம், புராணங்களில் பெரும்பிரளயங்களாக, அதாவது கடல்கோள்களாக விளக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவு நடைபெற்ற காலத்தில் வாழ்ந்திருந்த மனுவே, மனித இனத்தின் தந்தை ஆனார்.

பாகவத புராணக் கணக்குப்படி, மலய மலையை நடுவிடமாகக் கொண்ட திராவிட தேசத்தின் நடுப்பகுதி, இப்பேரழிவிலிருந்து பிழைத்து நிலை கொண்டு விட்டது. திருமாலின் (சமஸ்கிருத விஷ்ணுவின்) முதல் அவதாரம் எனக் கருதப்படுவதாய ஒரு மீன், கடல்நீரில் மூழ்கிவிடுவதினின்றும் தன்னைக் காப்பாற்றிவிடுமாறு மனுவுக்கு, அருகில் ஒரு படகைக் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய அரசர்களாகிய பாண்டியரின் அரசச் சின்னம் மீன் என்பது, ஈண்டுக்