பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழர் தோற்றமும் பரவலும்



செல்வாக்கு காரணமா? அல்லது ஏப்நு மக்களின் மூதாதையர் இனத்தவராகிய 'அப்ராமிக்' (Abrahmic) மக்கள் உள்ள யூபிரடஸ் ஆற்றங்கரையில் (தென் மேற்கு ஆசியாவில்) "சால்டீஸ்" (Chaldees) நாட்டிற்கு ஹாரன் (Harran) வழியாகக் கானனுக்குக் (Canaan) குடிபெயர்ந்தது காரணமா? அல்லது, அடிமைப்பட்டிருந்த காலத்தில், பாபிலோனியர்களின் சுற்றுச் சூழலின் ஆட்சி காரணமா என்பன இன்னமும், நல்ல உறுதியான சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட வேண்டி உளது. பெரும்பாலும் இம்மூன்று காரணங்களுமே அவ்வொருமைப்பாட்டைக் கொண்டு வர ஒன்று பட்டிருக்கலாம். (Hall, The Ancient History of the Near East, 8th Edition p. 209)

30) காளைமாடு வழிபாடு

மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டன் Creton மக்கள் வளர்க்கும் காளைமாடு செயலாற்றல் கடல் ஆற்றல்களை உணர்த்தும் இயற்கைச் சின்னமாம். ஏறு தழுவல் விளையாட்டு, ஓரளவு சமயச் சார்புடையது. ஆகவே அதுதானே காளைமாட்டுக்கு ஒருவித தெய்வத் தன்மையைக் கொடுக்கிறது. ஆனால், கிரீட்டில், காளைமாட்டுத் தெய்வம் எனப் போற்றுவதற்கான, நேரிடை அகச்சான்று எதுவும் இல்லை (The Archaeology of Creat : At Introudction 939)

கிரீட்டனில் உள்ள இடிபாடுகளில் கி.மு. 3000 முதல் 1100 வரையானது எனக் கணிக்கப்படும் வரலாற்றுக்கு முந்திய கால கட்டமாம் "மினோயன்" (Minoan) ஊழிக் காலத்தின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஏறு தழுவல் நிகழும் தொழுவக் காட்சியின், அரைத்த சாந்தால் தீட்டப் பட்ட வண்ண ஒவிய நினைவுச் சின்னங்கள் உள்ளன.