பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

149



Minor Religions) பக்கம் 114-115) என்ற ஆங்கில நூலைக் காண்க.

34) The Matrilineal System (தாய்வழி வரும் குடிமுறை).

தாய்வழி உறவுக்கும், தாய் ஆட்சிக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டினைக் கண்டாக வேண்டும். முன்னது பின்னதைக் குறிக்காது. தாய்வழி உறவினைப் பின்பற்றும், வளர்ந்த நாடுகள் பலவற்றில், பெண் ஆட்சி நடைமுறையில் இல்லை. தொல்பழங்காலச் சமுதாயத்தில், தாய்வழி உறவு நிலையினையும், காலம் செல்லச் செல்ல, அது வெளிப்படுத்திய பயன்களைத் திருவாளர் ஜே. ஜி. ப்ராசர் (J.G. Frazer) அவர்கள் விளக்கியுள்ளார். குடிவழிப் பிறப்பையும், குடிவழிப் பொருள்களை அடைதலையும் தாய்வழிப் பெறுவது ஒன்றே, அப்பழங்குடி தாய்வழி ஆட்சியைப் பெற்றிருப்பதாகக் கொண்டுவிடக் கூடாது என அவர் கூறுகிறார். தாய்வழி மரபு தாய் ஆட்சி ஆகிவிடாது. அதற்கு மாறாகப் பெண்கள் எப்போதும் குற்றேவல் செய்யப் படுவோராகவும், பரவலா அடிமைகளாகவும் மதிக்கப்படும். நனிமிகக் காட்டுமிராண்டி இனத்தவரிடையே, தாய்வழி ஆட்சி நிலவுகிறது. எகிப்தில் இருப்பது போலவே, கிரீட்டிலும், அரசுரிமை, பெண்கள் வழியே ஆகும்.

அரசுரிமை, பொருள் உரிமைகளைத் தாய்வழி ஆட்சி முறை மூலம் பெறும் வழக்கம் செல்வாக்குப் பெற்றிருப்பது, உண்மையான ஆட்சி உரிமையை ஆண்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவில்லை.

35) திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் "மருமக்கள் தாயமும், சங்க இலக்கியமும்" என்ற நூலினைக் காண்க. (Marumakkal tayam and Sangam Literature. Z.D.M.G. Vol. IX No. 3. p 255).