பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இணைப்பு 1



ஊழி விளக்கம்

1. ஆர்க்கேயன் பேரூழி (Archaean Zoic):

வேரில்லாக் கடற்பாசியும், பனிப் பாறைகளும் இரும்பு, செப்புப் படிவங்களும் உருவாகியதும், மலைகள் தோன்றி, எரிமலை வெடித்துக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மர இனமும், மாவினமும் தோன்றியதும், ஆகிய முதல் பேருழி 450 முதல் 60 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

2. ஆர்டோவீசியன் பேரூழி (Ordovician):

முதுகெலும்பு இல்லா உயிர்கள் தோன்றிய காலம். சுண்ணாம்புக் கல், ஈயம், துத்தநாகப் படிவங்கள் உருவான காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

3. கார்பானிபெரசு ஊழி (Carboniferous)

வெப்ப நிலைக் காடுகள் தோன்றி அழிந்து நிலக்கரிப் படிமத் தளங்கள் உருவான தொல்லூழி ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

4. கேம்பிரியன் ஊழி (Cambrian Era)

பாலெயோ ஜோயிக் ஊழியின் முதல் பகுதி. நிலப்படிவம் தோன்றிய 450 கோடி ஆண்டிலிருந்து 50 கோடி ஆண்டு