பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழி விளக்கம்

153


இலைக்கொத்து கொண்ட வெப்ப மண்டலக் காடுகளும் வளர்ந்த காலம்.

9. டேவோனியன் ஊழி (Devonian Era)

மண்ணியல் படிவ அமைப்புகள் உருவான காலம். மீன் மற்றும் நிலத்திலும் நீரிலும் வாழ்வன தோன்றிய காலம். ஆறு கோடி ஆண்டு வயதுடையது.

10. பாலியோ ஜோயிக் ஊழி (Paleo Zoic)

வேரில்லாக் கடற்பாசியும், பனிப்பாறைகளும், இரும்புச் செப்புப் படிவங்களும், உருவாகியதும், மலைகள் தோன்றி எரிமலைக் குழம்புகள் பாய்ந்ததும், கண்ணுக்குப் புலப்படாப் புல் பூண்டுகளும், முதல் மாவினமும் தோன்றியதும் ஆகிய ஆர்க்கேயோ ஜோயிக் (Arcaro Zoic) என்ற முதல் ஊழிக்குப் பிற்பட்டதும், ஊர்வனவும், சின்னஞ்சிறு இலைத் தொகுதிகளைக் கொண்டதும், ஆன திரியாஸிக் (Triasica) என்ற காலப் பிரிவு. மண்டையில் கொம்பு போலும் மூன்று புடைப்புகளை உடைய விலங்கினங்களும், பறவைகளும் முதன்முதலாகத் தோன்றிய, ஜுராஸ்ஸிக் (Jurasses) என்ற காலப் பிரிவு. தொடக்க நிலைப் பாலூட்டிகளும், மலர்ச் செடிகளும் தோன்றியதும் வெண் சாக்குப் படிவங்கள், உருவாகியதுமான, க்ரெட்டசியேயஸ் (Cretaceous) காலப் பிரிவு, ஆகிய மூன்று காலப் பிரிவுகளைக் கொண்டதும், பாலூட்டிகள் பெருகியதுமான ஆறு கோடி ஆண்டளவினதும் ஆன செரோ ஜோயின் (Cero Zoic) ஊழிக்கு முந்தியதுமான, மெஸ்ஸோ ஜோயிக் (Meso Zoic) ஊழிக்கு முற்பட்டதும் ஆம்.

11. பெர்மியன் ஊழி (Permion Era)

5 கோடி ஆண்டு வயதுடையது. தொல் உயிர் ஊழியின் இறுதி அடுக்கு. ஊர்வன பெருகிய காலம். பெரிய மலைகளும், பனிப்