பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் தோற்றமும் பரவலும்



6. அப்போலோ (Appollo): கிரேக்க-உரோமப் பழங்கதைகளில், அழகு, இளமை, ஆற்றல், இசை, செல்வம் ஆகியவை வாய்ந்த ஒரு கடவுள், தமிழர் கடவுளாம் முருகனுக்கு ஒப்பான கடவுள்.

7. அமஜோனிட்டே (Amazonite) தென் அமெரிக்காவில் ஓடி அட்லாண்டிக் பெருங்கடலோடு கலக்கும் அமேஜான் ஆற்றங்கரையில் காணப்படும், நடுத்தர விலை உள்ள ஒருவகைப் பச்சைக்கல்.

8. அம்மான் (Ammon) பண்டை எகிப்தியரின் கடவுளாம் ஜேயஸ் (Zeus) அதாவது வியாழக்கடவுள் மற்றும் விவிலிய நூலில் வரும் "லாட்" (Lot) என்பான் வழி வந்து, தென்மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த, கெமிடிக் பழங்குடியினர்.

9. அர்ட்டேமிஸ் (Artmis) கிரேக்கப் பழம் புராணங்களில் வரும் திங்கள் கடவுள். கிரேக்க அப்பொலோ கடவுளின் உடன்பிறப்பு. பாரத திரெளபதி அம்மனுக்கு நிகராகக் கருதப்படும் கடவுள்.

10. அர்ஜிவ் (Argive) கி.மு. ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, கிரேக்கப் பழம் புலவரின் பாடல்களில் கூறப்பட்டிருக்கும் கிரேக்க மாவட்டம் ஒன்றில் வாழ்ந்திருந்த பழங்குடியினர்.

11. அலெப்போ (Aleppo) சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம்.

12. ஆர்க்கேயன் பாறை (Archaean Rock) நிலநூல் ஆய்வில் முதற்கண் காணப்படாத மதிக்கப்படும் பழம்பாறை.

13. ஆர்ச்செபெலகோ (Archipelago) கடலிடையே உள்ள தீவுக் கூட்டம்.