பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

157



14. ஆன்த்ரோபோகிராபி (Anthropogeography) பழங்குடிமக்கள் இனம், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, சமுதாய வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு.

15. ஏஜியன் (Aegean) மத்திய தரைக்கடலில், கிரீஸுக்கும், துருக்கிக்கும் இடையில் உள்ள ஏஜியன் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களில், கிரேக்கப் பழங்குடியினர்களுக்கு முன் வாழ்ந்திருந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்திய தொல் பழங்குடியினர்.

16. அஸிஸி (Assis) மத்திய இத்தாலியில் உள்ள ஒரு நகரம்.

17. அஸ்டெக்ஸ் (Aztecs) அமெரிக்க நாட்டுச் சிகப்பு இந்தியர்கள் வழிபடும் நிலத்தெய்வம்.

18. ஹமிடிக் இனம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் பண்டைய எகிப்து நாடுகளில், கி.மு.3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.

19. ஹாரன் (Harran) கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின் மேற்கில் உள்ள ஒரு நகரம்.

20, இ.அ. (E.A.) பாபிலோனியப் பழம் புராணங்களில் வரும் நிலத்தடி நீர்க்கடவுள், அந்நாட்டு நிலத் தெய்வமாம் என்லியோடு (Enlil) உறவுடையது.

21. இப்னு பதூதா (Ibnu Batutha) கி.பி. 1304-1368ல் வாழ்ந்திருந்த ஆப்பிரிக்க நாட்டு, உலகப் பணி.

22. இஷ்தர் நின்னி (Eshar-Ninni) பாபிலோனியா மற்றும் அஸ் ரீயா நாடுகளில் அன்பு மற்றும், வளம் தரும் பெண் கடவுள்.

23. ஹிட்டிஸ் (Hits) சிற்றாசியாவிலும் சிரியாவிலும், கி.மு. 700க்கு முன் வாழ்ந்திருந்த தொல்பழங்குடியினர்.