பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழர் தோற்றமும் பரவலும்



24. இட்ருசிகன் (Eirusema) மேற்கு, இத்தாலியின், மத்தியப் பகுதியாம் இட்ருசியா என்ற பகுதியில் வாழ்ந்திருந்த தொல்பழங்கால மக்களின் பண்பாடும் மற்றும் மொழி.

25. யூப்பிரடஸ் (Euphrates) கிழக்குத் துருக்கி, சிரியா மற்றும் இராக் நாடுகள் வழியாக ஓடிப் பாரசீக வளைகுடாவில் கலக்கும் ஆறு. அதனுடன் வந்து கலக்கும் ஆற்றின் பெயர் டைகிரிஸ்.

26. இயோலித்திக் (Eolithic) கரடுமுரடான கல்லால் ஆன செய்கருவிகள் பயன்படுத்தப் பெற்ற தொல்பழங்கால நாகரீகம் பற்றிய ஆய்வு.

27 இலியட் (liad) கிரேக்கர்கள், சிற்றாசியாவின் வடமேற்கில் உள்ள பழைய நகரமாகிய டிராயை (Troy) முற்றுகை இட்டபோது நடைபெற்ற ட்ரோஜன் (Trojan) சண்டையை இருபத்து நான்கு பத்தகம் அளவு பெரிதாகப் பாடப்பெற்ற பழங்கதை, கிரேக்கப் பெரும்புலவர் ஹோமர் அவர்களின் படைப்பு எனக் கூறப்படுகிறது.

25.ஹிரோடோடஸ் (Hirodotus) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர்.வரலாற்று நூலின் தந்தை என மதிக்கப்பட்டவர்.

29. உர் (ப்) யூப்பிரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப் பழம்பெரும் நகரம்.

30. உராலி (Uralis) தென் இந்தியக் காடுகளில் வாழ்ந்திருந்த காடவர்க்கு இனமான தொல் பழங்குடியினர். சோவியத் குடியரசின் மையப்பகுதியில் ஒடும் ஆற்றுப் படுகையில் வாழ்ந்திருந்த பழங்குடியினர் என்றும். அவர்கள் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையானது என்றும் கூறப்படும்.