பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

159



31. ஹெர்ரோபொலிட்டே (Heroopolite) சூயஸ் கால்வாய்க்கு அணித்தாக உள்ள ஒரு வளைகுடா.

32. "எத்னோக்ரபி” (Ethnography) மனித இனப்பரப்பு, தொல்பழங்கால மனித இனப்பரப்பு வேறுபாடு பற்றிய ஆய்வு அறிவு.

33. ஹமிடிக் இன்ம் (Hamitic Race) வட ஆப்பிரிக்கா, தென் ஆசியா, மற்றும் எகிப்திய நாட்டில், கி.மு. 3000 ஆண்டு முதல் வாழ்ந்து வரும் பழங்குடியினர்.

34. ஹெல்லனிக் (Helenic) தொல்பழங்காலக் கிரேக்க நாட்டு மொழி. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

35.ஹெல்லனிஸ்டிக் காலம் (Hellainistic Age) கிரேக்கப் பெருவீரன், அலெக்ஸாண்டர் மறைவுக்கும், அகஸ்டஸ் ஆட்சி ஏற்றதற்கும் இடைப்பட்ட காலம்.

36. எலாமிட்டே (Elamite) இன்றைய இரான் நாட்டில் உள்ள, பழம்பெரும் நாடாம் எலாம் என்ற நாட்டின் பழங்குடியினர்.

37. ஹெலியோபொலிஸ் (Helipolis) எகிப்தில், கெய்ரோ நகருக்கு வடக்கில் உள்ள பழம்பெரும் நகரின் இடிபாடுகள்.

38. என்கி (Enki) பாபிலோனிய நாட்டுப் பழங்குடியினராகிய சுமேரியர்களின் “உலகின் தோற்றமும் பேரழிவும்" என்ற பழங்கதையில் சுமேரிய முன்னோர்களைத் தோற்றுவிக்க அணு என்ற வான் கடவுளோடு, நிலப்பெண் கடவுளுக்கும் ஆண் கடவுளுக்கும் துணை நின்ற நீர்க் கடவுளாகக் கூறப்பட்டுள்ளது.

39. என்லில் (Enlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் நிலக்கடவுள்.