பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழர் தோற்றமும் பரவலும்



57. க்ளாடியன் (Claudian) கி.பி.390-404 ஆண்டளவில் இருந்த உரோமப் புலவர்.

58. க்ளாடியஸ் (Claudius) கி.பி.41 முதல் 54 வரை அரசாண்ட உரோமப் பேரரசன்.

59. குவார்ட்ஸைட்டே (Quartzite) பெரிய சக்கிமுக்கிக் கல் கலந்த, மின்னொளி வீசும், எளிதில் உருமாற்றம் செய்யக் கூடிய மணற்பாறை.

60. காப்படொசியா (Cappadocia) சிற்றாசியாவின் கிழக்குப் பகுதி. செமிடிக் இனத்து வணிகர்களால், தொடக்க காலத்தில் குடியேறப் பெற்ற பின்னர், பர்ஷியர்களால் கி.மு.584ல் வெற்றி கொள்ளப்பட்டது.

61. கேனன் (Cannan) இன்றைய இஸ்ரேல் நாடு எனப் பெரும்பாலும் கருதப்படுவது, ஜோர்டானுக்கு.மேற்கிலும், சிரியாவுக்குத் தெற்கிலும் இருப்பது.

62. கோயிட்டெய்(Kuetei) கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகிய போர்னியாவில் வழக்காற்றில உள்ள எழுத்து.

63. க்நொஸெஸ் (Knossos) பண்டைய கிரீட் நாட்டின் தலைநகர்.

64. காக்காஸியன் (Caucasian) தெற்கு ஐரோப்பாவில், கருங்கடலுக்கும், காஸ்பியன் கடல்களுக்கும் இடையில் உள்ள மலைத் தொடர்களின் இரு பக்கங்களிலும் வாழந்த பழங்குடி மக்களின் பண்பாடு.

65. கூஸ்கோ (Cuzco) தென் அமெரிக்காவில் பசிபிக்கடலைச் சார்ந்துள்ள பெரு நாட்டின் ஒரு நகர்.