பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

163



66. கோண்டு (Gondwana) வனம் கல்தோன்றி மண்தோன்றாக் காலமாம் தொல் உயிர் ஊழிக் காலத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வழியாக, ஆஸ்திரேலியா முதல் தென் அமெரிக்கா வரை, நீண்டு பரந்து கிடந்த நிலப்பரப்பு.

67. சப்ஹ (Sabah) தென் சீனக் கடலை ஒட்டி, வடகிழக்குப் போர்னியோவில் உள்ள மலேசிய மாநிலம்.

68. "சாப" (Saba) தென் அரேபியாவில் இருந்த தொல் பழம் நாடு.

69. சபஹேயன் (Sabaean) தென் ஆபிரிக்க மொழி - கல்வெட்டுகளில் மட்டுமே காணக் கூடியது.

70. சாகய்ஸ் (Sakais) மலேயத் தீபகற்பத்தில் வாழ்ந்த பழங்குடியினர்.

71. சாலமன் (Solomon) கி.மு. 10வது நூற்றாண்டில், இஸ்ரேல் ஆண்ட டேவிட் என்ற அரசன் மகன். முதலாவது கோயிலைக் கட்டியவன். அறிவுக்குப் புகழ் பெற்றவன். . .

72. சால்டிஸ் (Chaldeas) தெற்கு பாபிலோனியாவில், துருக்கியில் தோன்றி, பாரசீக வளைகுடாவில் கலக்கும் யூப்ரடஸ் ஆற்றின் வண்டல் படிந்து உண்டான கீழ்ப் பகுதியாம் மெஸ்படோமியாவில் உள்ள நிலப்பரப்பு.

73. சால்டிஸ் (Chaldeams) சால்டீம்ஸ் நாட்டு மக்கள்.

74. சிக்கா (Sicca) ஆப்பிரிக்காவின் வட கடற்கரையைச் சார்ந்த இடம். பொயினிஷியா மக்களின் குடியேற்ற நாடு; பெண்களைத் தேவதாசிகளாக, அதாவது கடவுளுக்குப் பணி புரிவர்களாகக் கொடுக்கும் வழக்கம் இருந்த ஓர் இடம்.