பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழர் தோற்றமும் பரவலும்



75. சிரியா (Syria) மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரையைச் சார்ந்த தொல்பழம் நாடு. -

76. சித்தியன் (Scythian) தென்கிழக்கு ஐரோப்பா, மற்றும் ஆசியாவில், தொல் பழங்காலத்தில் வாழ்ந்திருந்த, நாடோடி வாழ்க்கையும், போர்க் குணமும் வாய்ந்த மக்களின் நாகரீகம், மற்றும் அவர்கள் வழங்கிய இராணிய மொழி.

77. ஷீபா (Sheba) கி.மு. பத்தாம் நூற்றாண்டில் இஸ்ரேலை ஆண்டிருந்த சாலமன் மன்னனின் பெருமை அறிவாற்றல்களை ஆய்ந்து அறிய அவன் அவைக்குச் சென்ற ராணி. அவள் ஆட்சி தென்மேற்கு அரேபியாவில் உள்ள யேமன் நாடு வரை பரவியிருந்தது.

78. சிய்பெலெ (Cybele) ஆசியப் பழங்குடி மக்களால் வழிபடப் பெற்ற தொல் பழங்கால, நிலச்செல்வம் கிரேக்க நிலத்தெய்வம் "ரேகா" (Reha) வாகக் கருதப்படும்.

79. சுக்ஹு (Sukuh) மத்திய அமெரிக்காவில் உள்ள பண்டைய நிலப்பகுதி.

80. சுசா (Susa) இரான் நாட்டின் தெற்கில் இருந்து அழிந்து போன தொல் பழம் இடம்.

81. சுமத்ரா (Sumatra) மலையத் தீபகற்பத்திற்குத் தெற்கில் உள்ள கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் பெரிய தீவு.

82. சுமர் (Sumer) யூபிரடஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ்ப் பகுதியில் இருந்த தொல்பழம் நிலப் பகுதி.

83. சுமேரியன் (Sumerian) தென் மேற்கு ஆசியா, யூபிரடஸ் ஆற்றங்கரையில் இருந்த தொல் பழம் நாடாகிய பாபிலோனியாவில் வாழ்ந்திருந்த, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்திய பழங்குடியினர். -