பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

165



84. செலபெஸ் (Celebes) கிழக்கிந்தியத் தீவுகளில் போரினியோவுக்குக் கிழக்கே உள்ள தீவு.

85. செல்லீயன் (Chellean) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பழங்கற் காலத்திய செய்கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்.

86. சேனா (Sena) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இலங்கை ஆண்ட அரச இனம்.

87. செப்ஹர் (Sephar) செபியின் எனக் கருதப்படும் ஒரு நாடு.

88. செமான்ங்ஸ் (Semangs) ஜாவாவில் வடக்குக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம்.

89. ஸெஸ்டெர்செ (Sesterce) உரோம் நாட்டு நாணயம். தொடக்கத்தில் வெள்ளியாலும் அடுத்து, பித்தளை அல்லது செப்பில் செய்யப்பட்டது.

90. செரம் (Ceram) கிழக்கிந்தியத் தீவுகளில் இந்தோனேஷியாவைச் சார்ந்த ஒரு தீவு.

91. ஜஸ்பர் (Jasper) ஒரு வகை வண்ணக் கருவிகள்.

92. ஜஸ்பர்ஸ் (Jaspers) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தத்துவ மேதை.

93. ஸொகொடோ (Sokoto) மத்திய ஆப்பிரிக்காவில், ஹெளஸா இனத்து மக்கள் வாழும் பல பகுதிகளுள் ஒன்று.

94. ஸொகொத்ரா (Sokotra) இந்தியப் பெருங்கடலில் அரேபியாவுக்குத் தெற்கில் உள்ள ஒரு தீவு.

95. ஸொலிமி (Solymi) கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரால் தென் ஆசியாவிற்குத்