பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழர் தோற்றமும் பரவலும்



பகுதிகளில் நான் காட்ட இருக்குமாறு, இவர்கள் மண்ணோடு பிறந்த தொல்முது குடிமக்களின் வேறு வகையாகக் காட்டவல்ல, ஐயத்தொடுபட்ட சிறு மரபுச்சான்றுதானும் இல்லா மூதாதையர் ஆவர்.

வடஇந்தியா மற்றும் மத்தியதரைக்கடற்பகுதி மூதாதையர்கள், இன்று நிலைத்த குடியினராய் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கடந்து செல்லும் இடைவழியாகத் தென்இந்தியா அமைந்திருந்தமையே, தென் இந்தியாவுக்கும், மத்திய தரைக்கடற்பகுதிக்கும் இடையில் நிலவும், மனித இனம் மற்றும் பிறவகையான ஒருமைப்பாடுகள் உண்மைக்குக் காரணமாம். (டாக்டர் இ. மக்லியன். Dr. B. Maclean) வட அமெரிக்க இந்தியர்களும், எகிப்தியப் பழங்குடியினரும் தாங்கள் நாடு விட்டு நாடு வந்தவர். அதாவது வந்தேறியவர்கள் என்ற மரபினைக் கொண்டுள்ளனர் என்பதும், திருவாளர் ஈரென் (Heeren) அவர்கள், எகிப்திய நாகரீகத்துக்கு இந்திய மூலத்தை அடிப்படையாகக் கொள்வதற்கு, எகிப்திய மண்டை ஓட்டினை அடிப்படைச் சான்றாகக் கொள்வதும் வியப்பிற்கு உரியவாம். எகிப்தியரின் தொடக்ககால வாழிடமும், ஆப்பிரிக்காவின் வடகிழக்குக் கடற்பகுதியும் ஆகிய “புன்ட்” (Punt) என்ற பகுதி மலபார் கடற்கரையோடு கூடிய, பாண்டியர் நாடாம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. ஆனால், இதை உறுதி செய்ய, நல்ல வலுவான அகச்சான்றுகள் மேலும் தேவை (அடிக்குறிப்பு : 5: காண்க.)

பண்டைத் தமிழரின் தோற்றம் குறித்த ஆய்வுக் களத்தில், போதுமான எண்ணிக்கை உள்ள கொள்கைகள் இருக்கின்றன. அவற்றுள் நனிமிக இன்றி அமையாதன சில பற்றி ஆய்வு செய்ய நான் முன்வருகின்றேன். திராவிடர்கள், தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான