பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழர் தோற்றமும் பரவலும்



112. தகோபா (Takoba) தூர கிழக்கு நாடுகளில் ஒன்றான மலைய தீபகற்பத்தில் உள்ள ஓர் ஊர்.

113. தாஸ்மானியா (Tasmania) ஆஸ்திரேலியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள ஒரு தீவு.

114. தாய்லாந்து (Thailand) தென்கிழக்கு ஆசியாவில், வங்காள விரிகுடா மற்றும் சயாம் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு நாடு.

115. நீம்ராட் (Nimrod) கிறித்தவ விவிலிய நூலில் வரும் "குஷ்" என்பான் மகன். நல்ல வேட்டையாளன்.

116. நியோலித்திக் (Neo-Lithic) புதிய கற்காலம். மெருகேற்றப்பட்ட கல்லில் செய்யப்பட்ட படைக் கலங்களைக் கையாண்ட காலம்.

117. நின்லில் (Ninlil) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் ஆண் நிலத் தெய்வம் என்லில் (Enli) என்பான் மனைவி.

118. நீரோ (Nero) கி.பி. 54 முதல் 68 வரை ஆட்சியில் இருந்த உரோமப் பேரரசன்.

119. நெக்கோ (Necho) சூயஸ் கால்வாயை வெட்டத் தொடங்கிய எகிப்திய மன்னன்.

120. நெகிரிட்டோ (Negrito) கிழக்கிந்தியத் தீவுகள், பிலிபைன்ஸ், மற்றும ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் பல்வேறு வகை நீகிரோ இனத்தவர்.

121. நோஅக் (Noah) விவிலியக் கதையில் கூறுமாறு, ஊழிப் பெருவெள்ளத்தின் போது இறைவன், தன் அருளால் ஆற்றலால் படைத்த தோணியை ஓட்டியவர்.