பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் மற்றும் பிற பெயர் விளக்கம்

171



140. ப்ய்லோன் (Pylon) எகிப்தியக் கோயில்களின் கோபுர வாயில்.

141. பிளைனி (Pliny) கி.பி.23 முதல் 79 வரை வாழ்ந்திருந்த உரோம் நாட்டு எழுத்தாளர்.

142. புன்ட் (Punt) எகிப்தியர்களின் தொல் பழங்கால வாழிடம். கி.மு. 2750 முதல் வாணிக நிலையம். டோமாலி கடற்கரையில் இருந்தது.

143. பெட்ரா (Petra) ஜோர்டன் ஆற்றுப் பகுதியில் உள்ள அரபு நாட்டின் பழைய நகரம்.

144. பெரு (Peru) தென் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையைச் சார்ந்த நாடு.

145. பெல்லேரோ போன் (Bellerophon) கிரேக்க நாட்டுப் பழங்கதைகளில் தென் கிரேக்கத்தில் இருந்த ஆடம்பர வாழ்க்கைக்கும், வாணிகத்திற்கும் பெயர் பெற்ற கோரித் (Corith) நகரை ஆண்டவனும், அறிவாற்றலும், பேராசையும் கொண்ட சிஸ்ய்பஹுஸ் (Sisyphus) மன்னனின் பெயரனுமாவன்.

146. பொலினீஷியா (Polynesia) பசிபிக் பெருங்கடலில் பரவலாகக் கிடக்கும் தீவுக்கூட்டம்.

147. பொய்னிஷியர் (Phoenicians) மத்திய தரைக் கடலைச் சார்ந்து, இன்றைய சிரியா மற்றும் பாலஸ்தீனத்துத் தொல் பழங்காலத்து நாட்டில் வாழ்ந்தவர். கடல் ஓட வல்ல வணிகர்.

148. போர் பெரிடிக் (Porpheitic) கரும்சிவப்பு, ஊதா வண்ண எகிப்தியப் பாறை.

149.போர்னியோ (Borneo) கிழக்கிந்தியத் தீவுக் கூட்டங்களில் மிகப் பெரிய தீவு.