பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழர் தோற்றமும் பரவலும்



150. போஸிடொன் (Poseidon) கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கடல் தெய்வம்.

151. மக்காய் (Mackay) ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு துறைமுகம்.

152. மங்கோலிட் (Mangoloid) மத்திய ஆசியாவைச் சேர்ந்த மஞ்சள் நிற மேனி, கறுத்துக் குந்தி நிற்கும் மயிர், சாய்ந்த பார்வை உடைய மக்கள் இனத்தவர்.

153. மருடுக் (Marduk) பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் தலையாய கடவுள்.

154. மலேஷியா (Malaysia) கிழக்கிந்தியத் தீவுக்கூட்டம்.

155. மலேயா (Malaya) தூரக்கிழக்கில், தாய்லாந்து உள்ளிட்ட ஒரு தீபகற்பம்.

156. மவோரி (Maori) பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கில் உள்ள நியூஸிலேண்ட் (New Zealand) நாட்டின், தொல் பழங்குடியினராம் பழுப்பு நிற மேனி மக்கள் மற்றும் அவர்கள் வழங்கும் மொழி.

157. மார்க்கோ-போலோ (Marco Polo) கி.மு. 1254 முதல் 1224 வரை வாழ்ந்திருந்தவன்.இத்தாலி நாட்டுத் தொல் பழங்கால மாநிலமாம் வெனீஸ்யாவைச் சேர்ந்தவன். உலகம் சுற்றி வந்தவன்.

158. மிட்டானி (Mitanni) யூபிரடஸ் ஆற்றின் வளைவில் உள்ள தொல் பழம் நாடு. கி.மு. 15ஆம் நூற்றாண்டில் எகிப்தோடு போரிட்டுக் கொண்டிருந்த நாடு.

159. முண்டா (Munda) பர்மா மற்றும் மலேயத் தீவுகளில் வழங்கிய தொல் பழமொழி.