பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழர் தோற்றமும் பரவலும்



169. மெலெனேஷியர் (Melanesians) ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் உள்ள பவளத்தீவாம் மெலெனேஷியத் தீவில் வாழும் மக்கள்.

170. மினோயன் (Minoan) மத்திய தரைக் கடலில் உள்ள கிரேக்கத் தீவாம் கிரீட்டில் (Crete) கி.மு. 3000 முதல் 1100 வரை நிலவியிருந்த வரலாற்றுக்கு முந்திய பண்பாடு.

171. யுகாட்டன் (Yucatan) வட அமெரிக்கத் தீப கற்பத்தில், மெக்ஸிகோ வளைகுடா வரை நீண்டு இருக்கும் ஒரு நாடு.

172, யேமன் (Yemen) தென்மேற்கு அரேபியாவில் செங்கடல் பகுதியில் உள்ள நாடு.

173. வில்லா (Villa) இத்தாலி நாட்டில் சிற்றூரில் உள்ள வீடுகளைக் குறிக்கும் பெயர்.

174. வெஸ்பாஸியன் (Ves-pa-sian) கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன்.

175. வோகன் (Vocan) பிரென்ச்-இந்தோசீனாவில், அன்னம் என்னும் மாநிலத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருதக் கல்வெட்டில் காணப்படும் ஒரு நகரம்.

176. ஜென் (ZEN) போதி தர்மன் என்ற பெயர் பூண்டு, சீனா சென்ற காஞ்சிச் சிற்றரசன். அங்கு போதித்த தியானத் தத்துவத்திற்கு அங்கு இடம் பெற்ற பெயர்.

177. ஜூலுஸ் (Zulus) தென்ஆப்பிரிக்கா, நெட்டால் பகுதியில் வாழ்ந்திருந்த பண்டு (Bantu) என்ற நீக்ரோ இனத்தவர், மற்றும் அவர்கள் வழங்கிய மொழி.