பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழர் தோற்றமும் பரவலும்



இது, திராவிடர்கள் யார் என்ற வினாவிற்கு விடைகாண நம்மைத் தூண்டுகிறது. இதிலும், வரலாற்றுப் பேரறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை. ஆரியப் படையெடுப்பின்போது இந்தியாவில், நனிமிக வளர்ச்சி பெற்ற, ஒழுக்கம் நிறை திராவிட நாகரீகம், நிலை கொண்டு இருந்தது; திராவிடர் என்பார், மத்திய தரைக்கடல் இனத்தவரின் ஒரு பிரிவினர்; என்பனவே நடைமுறையில் இருந்த கொள்கைகளாம். இவற்றின் விளைவாகத் திராவிட நாகரீகம் வெளியிலிருந்து பெறப்பட்டதாக உரிமை கொண்டாடப்பட்டது. எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரீகத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது (குறிப்பு: 7 காண்க.).

இனம் சார்ந்த அடிப்படை உறுதி செய்யப்படும் போது, உடல் சார்ந்த தனிச்சிறப்பு கணக்கிடப்படுகிறது. ஆதிச்சநல்லூர், பலுஜிஸ்தானத்தில் உள்ள “நல்” என்ற ஊர், மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டவையிலிருந்து வரலாற்றுக்கு முந்தைய மண்டை ஓட்டு அறிவு, ஆராயப்படலாம். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மண்டை ஓட்டுத் தன்மையவான, மொகஞ்சதாரோ மண்டை ஓடுகள், பாபிலோனுக்கு அணித்தாக உள்ள “கிஷ்” (ஓடிண்ட) என்ற நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டனவும், ஆதிச்ச நல்லூரியிலிருந்து எடுக்கப்பட்டனவும், இன்றைய வெட்டர் (Veddahs)களுடையவுமான, மண்டை ஓடுகளின் இனமாம் என்பது, முடிவு செய்யப்பட்ட ஒன்று. திருவாளர் எல்லியோட் சிமித் (Elliot Smith) அவர்கள் முடிவுப்படி, ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள், பண்டைய எகிப்திய இன மண்டை ஓடுகளிலிருந்து வேறு பிரித்துக் காணக்கூடாதனவாம். இந்தியத் தீபகற்பத்தின் தொல்லூழிகாலப் பழங்குடியினர், இனவகையில், நீக்கிரோ இனத்தவர். தென்னிந்தியக் காடுகளில் வாழும் காடவர், மற்றும் இருளர் இன இரத்தத் தொடர்புடையவர். மக்கள் நாகரீக