பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழர் தோற்றமும் பரவலும்



இரண்டாவதாக, திராவிடரின் தோற்றம் அல்லது மூலம் குறித்த மனித இன் ஆய்வியல் கருத்தும் நமக்குக் கிடைத்துளது. திருவாளர் எச்.ரிஸ்சிலி (H. Risley) அவர்கள் கருத்துப்படி திராவிடர்கள் குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட தலை, பரந்த மூக்கு, நீண்ட முன்கைகளை உடையவர். அவர்கள், தொடக்கத்தில் பழங்கால மூல மக்களாக இருந்து, பின்னர், ஆரியர், சாகர், அல்லது சித்தியன், மற்றும் மங்கோலிய இனத்தோடு கலந்துவிட்டனர் (The people of India page :46) திராவிட மக்கள் தொகைக்கு வேறு வேறு பட்ட நால்வகை இனமூலங்கள் அடிப்படைக் கூறுகளைத் தத்தம் பங்காக அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட ஆஸ்திரேலியர் இன உறவு, இன்றைய துருக்கி நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த, சிந்திய மக்கள் திராவிட மக்களுக்கிடையிலான உறவு, திராவிடர் மங்கோலிய மக்களுக்கு இடையிலான உறவு, மற்றும்-திராவிடர் இந்தியப் பெருமலைக்கு அப்பால் உள்ள நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு, ஆகிய இக்கோட்பாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாதன; அடிப்படைச் சான்றுகள் அற்றன என்பது, தகுதி வாய்ந்த அத்துறை வல்லுநர்களால் சான்று காட்டி நிலைநாட்டப்பட்டு விட்டன. திருவாளர் குரூக் (W. Crook) அவர்கள் எடுத்துவைத்த, ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் திராவிடர் என்ற கொள்கையும், மேலே-சொல்லப்பட்டவை போல ஏற்க முடியாத ஒன்று. தமிழர்களை, இன்றைய கிரேக்க நாட்டில் பண்டு வாழ்ந்திருந்த கிரீட்டன் (Cretan) என்ற மக்களில் ஒரு பிரிவினரும், தங்களின் பிணம்புதை நடுகல்லின் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, தங்களை ‘டிரெம்மிலி’ (Tremmili) என்ற அழைத்துக் கொள்பவரும் ஆகிய, சிற்றாசியா (Asia-Minor) வைச் சேர்ந்த “லிசியன்” (Lycian) மக்களோடு இனம் காணும் முயற்சி ஒன்றும்