பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

13



மற்றுமொரு கருத்து, திராவிட மொழியும், மற்றும், வடகிழக்கு இந்திய மலையிலும் காடுகளிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் மொழியாம் முண்டா மொழியும் இரண்டறக் கலந்திருப்பதையும், அதன் விளைவாம் பழங்குடியினரிடையே இனக்கலவையையும் சுட்டிக் காட்டுகிறது. முண்டா மொழிகள் உண்மையான தமிழகத்துள் ஊடுருவியுளவா என்பது வெளிப்படக் கேட்கும் கேள்வியாகும் (குறிப்பு :13 காண்க) இம்முண்டா மொழிகளின் ஆதிக்க அடையாளத்தைக் கோதாவரி எல்லைவரை, ஒருவர் காணும்போது அதற்கு அப்பாலான தெற்கில், அதன் ஆதிக்க உண்மையைக் காட்டவல்ல, ஏற்கக்கூடிய சான்று எதுவும் இல்லை. இது, முறையான மொழி இயல் ஆய்வினால் மட்டுமே முடிவு செய்யப்படும். திராவிட மொழிக் குழுவைச் சேர்ந்ததாக மதிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமொழியைக் கொண்ட பிராகுயி மொழி, இடம் பெற்றிருப்பது திராவிடர் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்ற கூற்றிற்கு ஆதரவாகக் காட்டும் வாதம் ஆகும். தெற்கு பலுஜிஸ் தானத்தைச் சேர்ந்த “காலட்” (Kalat) நாட்டின் ஒரு பகுதியாகிய “கானட்டே” (Khanate) என்ற இடமே பிராகுயி மொழியின், பிறப்பிடமாக மதிக்கப்படும் என்றாலும், அம்மொழிச்சொற்கள் பலுஜிஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலும் இன்றும் காணப்படுகின்றன. அவர்கள் மத்தியதரைக்கடற்பகுதி நாடுகளில் ஒன்றான சிரியா நாட்டு அலெப்போ (Aleppo) நகரத்திலிருந்து வந்து குடியேறிவர் என்பது, அவர்கள் மரபு வழி வரலாறு. மனித இனப்பிரிவுப்படி பார்த்தால், அவர்கள், வடபாகிஸ்தான், மற்றும் தென்கிழக்கு ஆப்கனிஸ்தான்களின் பழங்குடியினராகிய பதான்கள் (Pathans), அல்லது உண்மையான பலுஜிஸ்தானத்து மக்களின் வேறுபடக் காணப்படுகின்றனர். முடிந்த முடிபாக, அவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர். முறையாக ஆய்வு செய்யப்பட்டால், பிராகுயி மொழி, தன் சொற்களை